பெண் காவலர் மீது ஏறி இறங்கிய அரசு பேருந்து… போக்குவரத்து விதியை மீறியதால் விபத்து.. அதிர்ச்சி சிசிடிவி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan31 July 2023, 11:45 am
திருப்பூர் குமரன் ரோட்டில் உள்ள வடக்கு மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவார் சாந்தி. இவர் குமரன் ரோட்டிலிருந்து வடக்கு காவல் நிலையம் நோக்கி ஒரு வழிப்பாதையில் தனது இருசக்கர வாகனத்தில் வந்தார்.
திடீரென அவர் அந்த ரோட்டில் யூ டர்ன் போடுவதற்காக போக்குவரத்து விதியை மீறியபடி தனது ஸ்கூட்டரை திருப்ப முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு இருசக்கர வாகனத்தின் மீது ஸகூட்டர் மோதியதில் தட்டு தடுமாறி போலீஸ் சாந்தி ரோட்டில் விழுந்தார்.
போக்குவரத்து நிறைந்த சாலையான குமரன் ரோட்டில் ஏராளமான வாகனங்கள் செல்லும் பரபரப்பான சாலையில் நடுரோட்டில் விழுந்து கிடந்த சாந்தியின் மீது அந்தவழியாக வந்த அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானதில், சாந்தியின் வலது கையில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். அக்கம்பக்கத்தினர் மீட்டு அவசரத்திற்கு அருகில் இருந்த போலீஸ் வாகனத்தில் சாந்தியை ஏற்றிய போலீசார் அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதித்து முதலுதவி அளிக்கப்பட்டு அவர் தற்போது கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்நிலையில் விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்தை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து ஓட்டுனர் பாலசுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நடந்த போது பதிவான சிசிடிவி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது