இனிமேல் குடிச்சிட்டு ஷூட்டிங் வந்த செருப்பாலே அடிப்பேன் – ரஜினியை எச்சரித்த பிரபலம்!

Author: Shree
31 July 2023, 3:23 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடித்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை நிரப்பவே முடியாது. தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார்.

ரஜினி தனது மனைவி லதா ரஜினிகாந்த் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் அதீத காதல் அன்போடு பேசியுள்ளார். அதாவது எனக்கு ஆரம்ப காலத்தில் நிறைய கெட்டபழக்கங்கள் இருந்தது. தினமும் தண்ணி அடிப்பேன், பாக்கெட் கணக்கில் சிக்ரெட் பிடிப்பேன் இதெல்லாம் என்னுடைய உடலை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்தது. பின்னர் பல படங்களில் ஸ்டைலுக்காகவே சிக்ரெட்டை தூக்கிப்போட்டு பிடிப்பேன் அதையெல்லாம் வயது வித்தியாசமின்றி மக்கள் ரசித்தார்கள்.

ஆனால், அந்த அத்தனை கெட்ட பழக்கங்ககளில் இருந்தும் என்னை மீட்டெடுத்துவர் என்னுடைய மனைவி லதா தான், என் மனைவியின் அன்பாலும், நல்ல மருத்துவர்களின் சிகிச்சையாலும் தான் இன்று நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என்று வெளிப்படையாக கூறியிருந்தார். மேலும் அண்மையில் நடைபெற்ற ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி,

உடலை கெடுக்கும் எந்த தீய பழகத்திலும் உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாதீர்கள். தயவு செய்து குடிப்பழக்கத்தை விட்டு விடுங்கள். நான் குடித்து எனக்கு நானே சூன்யம் வைத்துக்கொண்டேன். ஒருவேளை நான் குடிக்கும் பழக்கம் இல்லாதவனாக இருந்திருந்தால் இப்போது இருப்பதை விட இன்னும் உயரத்தில் இருந்திருப்பேன். எனவே குடிக்கவேண்டாம் குடிப்பழக்கம் உங்களுடைய அம்மா, பொண்டாட்டி, குடும்பத்தில் இருக்கிறவங்களை கஷ்டப்படுத்தும் என பேசியிருந்தார்.

இந்நிலையில் தற்போது பிளாஷ்பேக் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, கே பாலச்சந்தர் இயக்கிய ஒரு படத்தில் ரஜினி நடித்துள்ளார். அப்போது ஒரு ஷாட் மிஸ் ஆகிவிட்டதால் அதை எடுக்க உடனே கூப்பிட்டாராம். ரஜினி பதறிப்போய்விட்டாராம். காரணம் அவர் அப்போது குடித்துவிட்டு மதுபோதையில் இருந்துள்ளார்.

பின்னர் அது தெரியாமல் இருக்க அவசர அவசரமாக மேக்கப் போட்டு, ஸ்ப்ரே எல்லாம் அடிச்சுட்டு போய் நின்னாராம். அப்படியும் அவர் கண்டுபிடித்துவிட்டாராம். கடுங்கோபமாகிய கே பாலச்சந்தர் நாகேஷ் தெரியுமா, அவர் எப்படிப்பட்ட நடிகர் தெரியுமா? அவன் முன்னாலே நீ எல்லாம் ஒன்னுமே இல்ல.அப்படியாப்பட்ட மனுஷன் குடி பழக்கத்தால் அழிந்தார். இனிமே ஷூட்டிங்ல தண்ணி போடுறத பார்த்தேன் செருப்பால அடிப்பேன் என்று என்று ரஜினியை திட்டினாராம். அன்று குடிப்பழக்கத்தை விட்டவர் தான் இன்று வரை கையில் கூட தொட மாட்டாராம் ரஜினி.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 781

    7

    2