மாத வருமானமே இவ்வளவா? வனிதாவை கோட்டீஸ்வரி ஆக்கிய YouTube!

Author: Shree
31 July 2023, 8:29 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் யூடியூபில் கிடைக்கும் வருமானம் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். Vanitha Vijaykumar என தன் பெயரிலே சேனல் வைத்திருக்கும் அவர் அதில் ஆரம்பத்தில் சமையல் வீடியோக்களை போட்டு வந்தார். பின்னர் பேஷியன், ஆடை , அவுட்டிங், போட்டோ ஷூட் என தன்னுடைய routine அனைத்தையும் வீடியோவாக எடுத்துப்போட அதற்கு எக்கசக்க லைக்ஸ் குவிந்தது.

அதில் வருமானம் குறித்த கேள்விக்கு, தொடர்ச்சியாக வீடியோக்களை போட்டால் மாதம் ரூ.1 முதல் ஒன்றரை லட்சம் வரை சம்பாதிக்கலாம் என்றும், எப்போவாச்சும் ஒரு வீடியோ பதிவிட்டால் மாசம் ரூ.5 முதல் 10 ஆயிரம் மட்டுமே கிடைக்கும் என வனிதா வெளிப்படையாக கூறி இருக்கிறார். வனிதாவின் இரண்டாவது இன்னிங்ஸ் வளர்ச்சிக்கு பிக்பாஸ், சர்ச்சை , கல்யாணம் , யூடியூப் இதெல்லாம் தான் காரணமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Rachitha Fire movie glamour role சீரியலில் அம்மணி…சினிமாவில் திறந்தமேனி…’FIRE’ படத்தின் பாடலால் முகம் சுளித்த ரசிகர்கள்.!