3 நாட்களில் வெறும் 8 கிலோ மீட்டர்தான்… இது நடைபயணமா? இல்ல சொகுசுப் பயணமா? அண்ணாமலைக்கு கேள்வி!
Author: Udayachandran RadhaKrishnan1 August 2023, 8:15 pm
சென்னை ராயப் பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் எஸ் சி பிரிவு எம்பி ரஞ்சன் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
மோடி 15 லட்சம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னதற்கான ஆடியோ எங்களிடம் உள்ளது. உதயநிதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக தலைவர் எல்லாம் சொல்கிறார்கள், மன்னிப்பு கேட்க வேண்டியது எல்லாம் பாஜக தலைவர்கள் தான். மோடி 2013 ஆம் ஆண்டு பேசிய ஆடியோ திரையிடப்பட்டுள்ளது.
சிவ சேஷாத்திரி பள்ளிக்கூடத்தை மூட வேண்டும், தமிழாக்கத்தை தப்பாக கற்பிக்கிறார்கள். ஒன்பது வருடம் ஆட்சியில் இருந்து கருப்பு பணத்தை மீட்க முடியவில்லை, பொதுவெளியில் மக்களிடம் மன்னிப்பு கேளுங்கள்
35 லட்சம் கோடி மக்களிடம் நவீன முறையில் கொள்ளை அடித்திருக்கிறார்கள். பல வரிகளை போட்டு மக்களை சுரண்டி 35 லட்சம் கோடி கொள்ளையடித்துகிறார்கள். இதனால் அவர்கள் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும்.
அண்ணாமலை பாதயாத்திரை என்று சொல்லிக்கொண்டு சொகுசு யாத்திரையை நடத்துகிறார். மூன்று நாட்களாக வெறும் எட்டு கிலோமீட்டர் சென்றுள்ளார். சினிமா பாடல் வரும் காட்சி போல அவர் சொகுசு பயணம் செய்கிறார்.
நடை பயணம் என்றால் அய்யா குமரி அனந்தன் அவர்களை போல் இருக்க வேண்டும்.அண்ணாமலை அனைவரையும் ஊழல்வாதி என்று சொல்கிறார், அதற்கு அவருக்கு தகுதி இருக்க வேண்டும், ஆரத்தி எடுத்த ஒரு பெண்ணுக்கு பின்புறமாக பணத்தை கொடுக்கிறார், ஆருத்ராவில் குற்றம் சாட்டப்பட்டவர், கையூட்டு வாங்குவது போல அந்த பெண்ணுக்கு இவர் காசு கொடுக்கிறார்.
44 தனி தொகுதிகள் தமிழ்நாட்டில் இருக்கிறது. தமிழக மக்களை ஏமாற்ற நினைக்கும் அண்ணாமலையை காங்கிரஸ் கட்சியின் எஸ்சி துறை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
அதிமுகவும் பாஜகவும் டபுள் ஆக்சன் செய்கிறார்கள், இரண்டும் ஒன்றுதான், வாரிசு அரசியல் என்று பேசுவதற்கு அமித்ஷா தகுதி இல்லை. மணிப்பூர் விவகாரத்தில் கொலைகாரர்களும் ,கொள்ளைக்காரர்களும் இருக்கிறார்கள். சிறுபான்மையினரை தாக்குவதால் வன்மமான மகிழ்ச்சி அடைகிறார்கள்.
9 ஆண்டு காலத்தில் தலித் மக்களுக்கு மட்டுமே நடந்த பிரிசனைகள் பல உள்ளன இதற்கு மேல் இஸ்லாமியர் மற்றும் கிருத்துவர்கள் , பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியணருக்கு பல அநீதிகள் நடந்தது. என்று அவர் கூறினார்.