ராமநாதபுரத்தில் அண்ணாமலைக்கு போட்டியாக களமிறங்கும் திமுக… அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 1:53 pm

ராமநாதபுரத்தில் அண்ணாமலைக்கு போட்டியாக களமிறங்கும் திமுக… அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ராமநாதபுரத்தில் ஆக.17-ல் திமுக தென்மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பான அறிக்கையில், முதலமைச்சர், கழகத் தலைவர் தலைமையில் கடந்த 22.03.2023 அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் நிறைவேற்றப்பட்டன.

கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA-2) நியமிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது.

மேலும், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம் நடத்திட முடிவெடுக்கப்பட்டு, முதலாவதாக கடந்த ஜூலை 26 அன்று திருச்சியில் டெல்டா மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தென் மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் (BLA2) பயிற்சி பாசறைக் கூட்டம்” வரும் 17-ஆம் தேதி (வியாழக்கிழமை) அன்று இராமநாதபுரம், தேவிப்பட்டினம் சாலை, பேராவூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!