உதவியாளரிடம் தனது காலணியை எடுத்து வர கூறிய கோட்டாச்சியர் : மீண்டும் சர்ச்சைக்குள்ளான அடுத்த சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 8:21 pm

விழுப்புரம் அருகேயுள்ள ஸ்டாலின் நகரில் அரசு புறம்போக்கு இடத்தில் வீடுகட்டி வாழ்ந்து வருபவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்குவதற்காக விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி மற்றும் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி ஜீப்பிலிருந்து இறங்கும் போது தனது காலில் காலணி இல்லாமல் இறங்கி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

அப்போது அந்த இடத்தை நேரில் வந்து ஆய்வு செய்யுமாறு பொதுமக்கள் அழைத்தவுடன் கோட்டாட்சியர் பிரவீணாகுமாரி தான் காலணி அணியவில்லை என்பதை உணர்ந்து தன் உதவியாளரிடம் காலணியை எடுத்து வருமாறு கூறியுள்ளார்.

ஜீப்புக்கு பின்புறம் தன்னை முழுமையாக காட்டிக்கொள்ளாமல் மறைத்துக்கொண்டு கையை மட்டும் நீட்டி காலணியை தரையில் வைத்தார். அப்போது அங்கு வந்த கோட்டாட்சியர் காலணியை அணிந்துகொண்டு ஆய்வை தொடர்ந்தார்.

ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் தனது உதவியாளரிடம் காலணிகளை எடுத்து வரச் சொன்ன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Nayanthara Use Periyar Words to reply for the Haters பெரியாரின் வார்த்தையை உச்சரித்த நயன்தாரா : யாரை விமர்சித்தார்? பரபரப்பு பேச்சு!
  • Views: - 432

    0

    0