மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி : முடிவில் நடந்த விபரீதம்.. .காஞ்சியில் அதிர்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
2 August 2023, 9:52 pm

மதுவுக்கு அடிமையான காதல் கணவனை திருத்த போராடிய மனைவி : முடிவில் நடந்த விபரீதம்.. .காஞ்சியில் அதிர்ச்சி!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தாஸ் (27). இவர் 6 வருடங்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த நிகிதா (25) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தாஸ்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் தினமும் வீட்டிற்கு குடித்துவிட்டு வருவதால் நிகிதா அதிக மன உளைச்சலுக்கு உள்ளாகி கணவனை திருத்த பல கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளார்.

அனைத்து போராட்டங்களும் தோல்வியுற்ற நிலையில், கடந்த 28 ஆம் தேதி இரவில் மீண்டும் தாஸ் அதிக போதையுடன் வீட்டுக்கு வந்துள்ளார். கடைசி முயற்சியாக கணவனை திருத்துவதற்காக கடந்த வாரம் தன்னுடைய உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, நீ குடிப்பழக்கத்தில் இருந்து விடுபடவில்லை என்றால் நான் கொளுத்திக் கொள்வேன் என்று கூறி தீக்குச்சியை பற்ற வைத்து கணவனை மிரட்டி உள்ளார்.

எதிர்பாராத விதமாக தீ நிகிதாவின் உடையில் பிடித்து உடல் முழுவதும் குபுகுபுவென எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்து அதிர்ந்து போன தாஸ் ,நிகிதாவை கட்டிப்பிடித்து காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

இதில் தாஸ் மீதும் தீ பிடித்து எரிய தொடங்கியுள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கீழ்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு 75% தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த நிகிதா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும் 40% தீக்காயங்களுடன் தாஸ் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

குடிப்பழக்கத்திலிருந்து காதல் கணவனை மீட்டெடுக்க போராடிய பாசக்கார மனைவியின் செயல் விபரீதத்தில் முடிந்தது.

  • Sivakarthikeyan transition from TV to big screen சீரியல் வாய்ப்புக்கு ஏங்கிய சிவகார்த்திகேயன்..NO சொன்ன சின்னத்திரை நடிகர்..!
  • Views: - 484

    0

    0