அஜித்தை அவங்க ஒதுக்கினதுக்கு இதான் காரணம்.. பல வருட உண்மையை வெளியிட்ட வடிவுக்கரசி..!
Author: Vignesh3 August 2023, 11:53 am
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார். குறிப்பாக பைக் ரேஸில் ஆர்வமிக்கவர் அஜித். அவர் வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மேலும், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து பைக் ரெய்டு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
இதனிடையே அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருந்தும் அப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து பைக் ரெய்டு செல்வதை அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்த பின்னர் ரிலாக்ஷேஷனுக்காக தான் பைக் ரெய்டு செல்வார். ஆனால், தற்போது கேப் விட்டு கேப் விட்டு பைக்கிலே டூர் செல்வதால் ரசிகர்கள் அஜித் மீது அதிருப்தி அடைந்து வருகின்றனர்.
இந்தநிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்த வடிவுக்கரசி அஜித்துடன் நடித்த அனுபவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதாவது, வான்மதி படம் 1996 ஆம் ஆண்டு வெளியாகி ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது.
அந்த சமயத்தில் வான்மதி படத்தில் அஜித்தை டப்பிங் பேசக்கூடாது என்று தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் ஒதுக்கி விட்டதாகவும், அவனுக்கு தமிழே சரியா பேச தெரியல, கலந்த மாதிரி பேசுறான். டப்பிங் வேண்டாம் என்று இதனால் தெரிவித்துவிட்டார்.
அந்த சமயத்தில் தான் ரஜினி சார் கூட அப்படித்தான் பேசுறாரு, அஜித் சரியாதான் பேசுகிறார். ரஜினி சாரையும் மைண்டில் வைத்து ஒருமுறை பேச வைங்கன்னு சொல்லிட்டேன். அஜித்தை டப்பிங் பேச வைத்தார். மேலும், நீ வருவாய் என படத்தில் ஷூட்டிங்கில் ஒரு உதவி இயக்குனர் லேட்டா வந்துட்டாரு உடனே அன்று டிவிஎஸ் ஸ்கூட்டி வாங்கி கொடுத்து விட்டார் அஜித். அவருக்கு ஓட்ட தெரியாதுன்னு சொன்னதும் அதை ஓட்டுவதற்கு ஆள போடுங்கன்னு சொல்லிட்டார் அப்படி ஒரு நல்லவர் அஜித்.
ரஜினியை போல் பேசுவார் என்று கூறியிருக்கிறார் வடிவுக்கரசி. மேலும், அஜித்திற்கு அப்படியே ஆப்போசிட் விஜய் பேசவே மாட்டாரு, எப்படி டப்பிங் மட்டும் இப்படி பேசுகிறார் என்று ஆச்சரியமாக இருக்கும் என்று வடிவுக்கரசி அஜித் விஜய் குறித்து புதிர்ந்துள்ளார்.