அருந்ததியர் குறித்து திமுக எம்பி ஆ.ராசா சர்ச்சை பேச்சு… சேற்றை வாரி இறைத்தது போதும்… இதோடு நிறுத்திக்கோங்க.. கொந்தளிக்கும் பாஜக..!!

Author: Babu Lakshmanan
3 August 2023, 1:45 pm

அருந்ததியர் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சு பேசிய திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் வாக்குச்சாவடி பொறுப்பாளர் பயிற்சி பாசறைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக துணைப் பொதுச்செயலாளரும், திமுக எம்பியுமான ஆ.ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது, அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமுதாயம் என்றும், அவர்கள் ஓட்டுப்போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை, ஆனாலும், அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள் ஒதுக்கீடு கொடுத்தார், எனப் பேசினார்.

அதோடு,இதைச் சொல்லி விட்டு அவர்களை குறைத்து மதிப்பிடவில்லை என்று கூறி மன்னிப்பு கேட்பது போல பேசினார். ஆ.ராசாவின் இந்தப் பேச்சு அருந்ததியர் சமுதாய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு எதிராக போராட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், சாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு சாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா? என திமுக எம்பி ஆ.ராசாவுக்கு பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது ;- அருந்ததியர் சமுதாய மக்களை மலம் அள்ளும் சிறுபான்மை சமூகம் என்றும், அவர்கள் ஓட்டுப் போட்டு யாரும் ஜெயிக்கப் போவதில்லை என்றாலும் அவர்களுக்கும் கருணாநிதி 3 சதவீத உள்ஒதுக்கீடு கொடுத்தார் என்று ஆ. ராசா அவர்கள் கூறியுள்ளது கடும் கண்டனத்திற்குரியது.

அருந்ததியர் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசி, அவர்களை புண்படுத்தியதற்கு ஆ. ராசா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதியை ஒழித்ததாக மார்தட்டிக் கொண்டு ஜாதி ரீதியாக அவமானப்படுத்துவது தான் திராவிட மாடலா?

தமிழகத்தின் முதலமைச்சர்களாக பணியாற்றிய ராஜாஜி, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரும் சிறுபான்மை சமுதாயங்களை சார்ந்தவர்கள் தான் என்பதை ஆ.ராசா உணர வேண்டும். சிறுபான்மை சமுதாயத்தை சேர்ந்தவர்கள் மீது சேற்றை வாரி இறைக்கும் வழக்கத்தை ஆ.ராசா நிறுத்திக் கொள்ள வேண்டும். முதலமைச்சர் அவர்கள் ஆ. ராசாவின் மீது கடும் நடவடிக்கை எடுப்பாரா?, எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

  • Kayadu Lohar Visit Kalahasti Temple Crowd Gathered பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!