நினைத்ததை சாதிக்கிறாரா எடப்பாடி பழனிசாமி…? மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வந்த இபிஎஸ் ; குட்நியூஸ் சொன்ன நிர்வாகிகள்..!!

Author: Babu Lakshmanan
4 August 2023, 11:47 am

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்காக வருகை தந்த எடப்பாடி பழனிசாமி குஷியடைந்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் செயல்பட்டு வந்தனர். அடுத்தடுத்து தேர்தல் தோல்விகளுக்கு இரட்டைத் தலைமையே காரணம் என்று கூறப்பட்டு வந்தது.

அதோடு, முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா பாஜகவுடன் கூட்டணியை விமர்சித்தார். மேலும் பாமக தலைவர்களின் கருத்திற்கும் ஆவேசமாக பதில் அளித்தார். மேலும், சசிகலா தலைமையில் ஒற்றைத் தலைமையை கொண்டு வரவேண்டும் என்றும் கூறினார். அவரது கருத்துக்கு அதிமுகவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து, கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுகவில் இருந்து அன்வர் ராஜாவை நீக்கி அறிவிப்பு வெளியிடப்பட்டது.

EPS - Updatenews360

இதனை தொடர்ந்து, அன்வர் ராஜா அரசியல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியே இருந்து வந்தார். இதனிடையே, தற்போது அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து, கட்சியை பலப்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டு்ம சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா அதிமுகவில் மீண்டும் இணைத்து கொள்ளப்பட்டார்.

அதன் பின்னர் அன்வர் ராஜா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- ஓராண்டுக்கு முன்னர் நீக்கப்பட்டேன். இப்போது மீண்டும் இணைந்துள்ளேன். சிறிய சறுக்கலில் இருந்து மீண்டு வந்து, அதிமுகவில் இணைந்துள்ளேன். கட்சியின் கொள்கைகளுக்கு உடன்பட்டு தொடர்ந்து பணியாற்றுவேன். எனக்கு கட்சியில் எந்த முக்கியத்துவமும் தேவையில்லை. மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி முடிவு செய்யும், எனக் கூறினார்.

அதிமுகவின் முன்னாள் நிர்வாகிகளை இணைக்கும் எடப்பாடி பழனிசாமியின் முயற்சி கைகூடுவதால், நிர்வாகிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Sikandar movie teaser release ஏ.ஆர்.முருகதாஸின் தரமான சம்பவம் LOADING…மிரட்டலாக வெளிவந்த சல்மான் கானின்”சிக்கந்தர்”பட டீஸர்..!
  • Views: - 359

    0

    0