மைனர் சிறுமிகள் பாலியல் பலாத்காரம்… 56 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரரின் சித்து வேலை ; கேரளாவில் பகீர் சம்பவம்..!!

Author: Babu Lakshmanan
5 August 2023, 8:45 am

கேரளாவில் மைனர் சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்சம்பவத்தில் ஓய்வு பெற்ற இராணுவ வீர் கைது செய்யப்பட்டார்.

திருவனந்தபுரம் அருகே உள்ள பூவார் என்னும் பகுதியில் 2 மைனர் சிறுமிகள் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். அவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் 56 வயதான ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஷாஜி. இவர் கடந்த மே மாதம் முதல் சிறுமிகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார்.

ஷாஜியால் பாதிக்கப்பட்ட சிறுமிகளில் ஒருவர், தங்கள் பள்ளியில் நடந்த ஆலோசனை கூட்டத்தின்போது தனக்கு ஏற்பட்ட கொடூர சம்பவத்தை கூறியதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து, பள்ளி நிர்வாகத்தினர் பூவார் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, போலீசார் ஷாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  • it is not easy to direct salman khan ரொம்ப கஷ்டம், அவர் இஷ்டத்துக்குதான் நடிப்பாரு- எல்லை மீறிப்போன முருகதாஸ் பட ஹீரோ?