கல்யாணம் பண்ணிக்காததுக்கு இதுதான் காரணம்.. குட் நைட் பட மணிகண்டன் சொன்ன ரீசன்..!
Author: Vignesh5 August 2023, 3:23 pm
விக்ரம் வேதா, ஜெய்ஹிந்த் உள்ளிட்ட பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் மணிகண்டன். இவர் சில படங்களில் டயலாக் ரைட்டர் ஆகவும் பணியாற்றியுள்ளார். சமீபத்தில், இவர் நடித்த குட் நைட் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று விமர்சனம் ரீதியாக மட்டும் வசூலில் குவித்தது.

குட் நைட் படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகம் கவனிக்கப்படும் ஹீரோவாக மணிகண்டன் மாறியுள்ளார். அடுத்து அவர் புதுமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் என்பவரின் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க உள்ளார். குட் நைட் படத்தை தயாரித்த நிறுவனம் தான் இந்த படத்தையும் தயாரிக்கிறது.

தற்போது, 35 வயதாகும் மணிகண்டன் இன்னும் ஏன் திருமணம் செய்யாமல் இருக்கிறார் என்ற கேள்விக்கு பேட்டியில் பதில் அளித்துள்ளார். இந்த கேள்வி எங்க அம்மா தான கேட்க சொன்னாங்களா.. அதற்கு நான் மென்டலி இன்னும் தயாராகல எப்போது சரி என எனக்கு தோன்றுகிறதோ அப்போது திருமணம் செய்து கொள்வேன் என மணிகண்டன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.