அட நம்ம சிம்ரன் பசங்களா இது?.. ஜிம்பாடியில் வாய்ப்பிளக்க வைக்கும் மூத்த மகனின் புகைப்படம்..!

Author: Vignesh
5 August 2023, 4:00 pm

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

simran-updatenews360

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

simran

தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து வரும் சிம்ரன், அந்தகன், துருவ நட்சத்திரம், வணங்காமுடி உள்ளிட்ட பல படங்களில் நடித்தும் வருகிறார். சிம்ரன் கடந்த 2003ல் பல ஆண்டு காதலரான தீபக் பக்கா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணமாகி இரு மகன்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், சிம்ரனுக்கு திருமணமாகி 20 ஆண்டுகளாகிய நிலையில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய மூத்த மகன் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்து ஜிம்பாடிபில்டர் போல் காணப்படுவதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 396

    0

    0