குழந்தை பெத்த உடம்பா இது!.. பூர்ணாவின் தாறுமாறான கவர்ச்சியில் ஆடிப்போன ரசிகர்கள்..!

Author: Vignesh
5 August 2023, 7:30 pm

கேரள மாவட்டம் கண்ணூர் பகுதியில் பிறந்தவர் நடிகை பூர்ணா இவரது இயற்பெயர் சமுனா காசிம் ஆகும்.படத்தில் நடிப்பதற்காக தனது பெயரை பூர்ணா என்று மாற்றிக் கொண்டார் இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என்று தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் நடன கலைஞராகவும் இருந்து வருகிறார் பூர்ணா.

poorna -updatenews360

இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில் வெளிவந்த படம் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு இந்த படத்தின் ஹீரோவாக நடிகர் பரத் நடித்திருந்தார் இவருக்கு ஜோடியாக பூர்ணா ஹீரோயினாக நடித்திருந்தார்.

poorna -updatenews360

தமிழில் பூர்ணா நடித்த முதல் படம் இதுதான். இதன்பிறகு பூர்ணாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தொடர்த்து கொடைக்கானல், பகடை, துரோகி, ஆடு புலி, வேலூர் மாவட்டம், வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சகலகலா வல்லவன், மணல் கயிறு 2, கொடிவீரன், சவரகத்தி, எவனுக்கு எங்கேயோ, மச்சம் இருக்கு, அடங்கா மறு, காப்பான், லாக் அப் போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

2021ல் வெளிவந்த தலைவி படத்தில் இவர் வி.கே.சசிகலாவாக நடித்துள்ளார். தொடர்ந்து பேய் படங்களில் பேயாக நடித்து இருந்ததால் “தி இந்து” பத்திரிக்கை அவரை “தெலுங்கு படங்களின் பேய் ராணி” என்று முத்திரை குத்தியது. அவனு (2012) மற்றும் அதன் தொடர்ச்சியான அவுனு 2 (2015) ஆகிய படங்களில் அவர் பாராட்டுகளைப் பெற்றார்.

poorna -updatenews360

அவுனு படத்தில் பேயாக நடித்ததால், திரைப்படத் தயாரிப்பாளர்கள் அவரை திகில் படங்களில் நடிக்க வைக்க வழிவகுத்தது. ராஜூ காரி காதி (2015) இல் பேயாக நடித்ததற்காக மேலும் பல பாராட்டுக்களைப் பெற்றார். தற்போது பூர்ணா ஆறு படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.தமிழில் மட்டும் பிசாசு 2, அம்மாயி, படம் பேசும் என்ற மூன்று படங்களில் நடித்து வருகிறார். இது மட்டுமில்லாமல் தெலுங்கில் இரண்டு படங்களிலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சாணித் ஆசிப் அலி என்கிற தொழிலதிபரை அவர் மணந்து கொண்டு ஒரு மகன் இருக்கும் நிலையில் புடவையில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

poorna -updatenews360

இந்நிலையில் இவருடைய கிளாமரான புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 332

    0

    0