கை அகற்றப்பட்ட குழந்தை பலி… காரணம் கேட்டால் குறை பிரசவம் : குழந்தையின் தாயார் கண்ணீர்!!!

Author: Udayachandran RadhaKrishnan
6 August 2023, 10:33 am

கை அகற்றப்பட்ட குழந்தை பலி… காரணம் கேட்டால் குறை பிரசவம் : குழந்தையின் தாயார் கண்ணீர்!!!

கை அகற்றப்பட்டு சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழுந்தை சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தது.

குழந்தையின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் குழந்தையின் கை அகற்றப்பட்டதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.

பெற்றோரின் குற்றச்சாட்டை அடுத்து விசாரணை குழு அமைத்து நடத்தப்பட்ட விசாரணையில் குழந்தைக்கு தவறான சிகிச்சை அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த குழந்தையின் தாய், குழந்தையின் மரணத்திற்கு காரணம் மருத்துவமனை நிர்வாகமே என தெரிவித்துள்ளார். காரணம் என்ன என்று கேட்டால், குறை பிரசவம் குறை பிரசவம் என்று மட்டுமே டீன் கூறுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 372

    0

    0