அது அப்போவே தெரிஞ்சுது நண்பா… ஜெயிலர் பாடல் என் மகன்களுக்காக எழுதியது – விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி!

Author: Shree
6 August 2023, 4:49 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனத்தை ஈர்த்தது.

தற்போது படத்தின் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படம் வரும் 10-ம் தேதி வெளியாகிறது. இதில் தமன்னா எப்போதும் இல்லாத வகையில் படு கவர்ச்சியாக நடித்துள்ளார். அதிலும் காவலா என்ற பாடலுக்கு மரணகுத்து ஆட்டம் போட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். குறிப்பாக அந்த பாடலில் சூப்பர் ஸ்டார் ரஜினியே ரசிகர்களுக்கு அவுட் ஆஃப் போகஸில் தான் தெரிந்தார். அந்த அளவுக்கு தமன்னாவின் கவர்ச்சி அழகை திகட்ட திகட்ட ரசித்தனர் ரசிகர்கள்.

மேலும் படத்தின் முன் பதிவு கோடிகளில் கலெக்ஷன்ஸ் குவித்துவிட்டது. அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களை மெர்சலாக்கிய. இப்படத்தில் ரஜினி ” டைகர் முத்துவேல் பாண்டியன்” என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவரது மனைவியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார். இதில் வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் மிரட்டியிருக்கிறார். மேலும், யோகி பாபு வழக்கம் போல் காமெடியில் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார்.

நேற்று ஜெயிலர் படத்தின் “ரத்தமாரே” என்ற பாடல் வெளியாகியது. மிஸ்ரா பாடியுள்ள இப்பாடலுக்கு விக்னேஷ் சிவன் லிரிக்ஸ் எழுதியிருந்தார். இப்பாடல் தந்தை மகனுக்கும் இடையிலான பாசத்தையும், தாத்தா – பேரனுக்கும் இடையிலான அன்பையும் வெளிப்படுத்தியிருந்தது. உருக்கமான இந்த மெலோடி பாடலை கதையோடு ஒன்றி கேட்டால் அனைவரது இதயத்தையும் இதமாக்கும் என நிச்சயம் நம்பலாம். இந்நிலையில் “ரத்தமாரே” குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது, தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்காக முதல் பாடலை எழுதினேன். என்னுடைய குழந்தைகள் உயிர், உலகுக்காக எழுதிய முதல் பாடல் இது தான்” என கூறி நெகிழ்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்ஸ் அப்போவே நெனச்சோம் அது அப்படித்தான் இருக்குமுன்னு என கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள். “ரத்தமாரே” பாடல் யூடியூப் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Sai Abhayankar Interview Highlightsவெறும் ரீல்ஸ்காக பாட்டு போடக்கூடாது…அனிருத்தை தாக்கிய சாய் அபயங்கர்..!
  • Views: - 1062

    23

    1