அந்த மாதிரி சீன்ல மட்டும் நடிச்ச நீ காலி… சூர்யாவை எச்சரித்த ஜோதிகா – காதலிக்கும்போதே கறார் கண்டீஷன்!

Author: Shree
7 August 2023, 1:15 pm

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வருபவர்கள் சூர்யா – ஜோதிகா. இவர்கள் இருவரும் சில ஆண்டுகள் காதலித்து பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2006-ம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு தியா என்ற ஒரு மகளும் தேவ் என்ற ஒரு மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

இவர்கள் ஒருவரும் காக்க காக்க திரைப்படத்தில் நடித்த பொது காதலித்து வந்தார்கள். அந்த படத்தில் வரும் ரொமான்ஸ் காட்சிகளில் உண்மையாகவே ரொமான்ஸ் செய்து வேற லெவல் கெமிஸ்ட்ரி கொடுத்தனர். 2003ம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது அப்போவே ரூ. 50 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்த படமாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் கெளதம் மேனன், #20YearsofKaakhaKaakha ட்ரெண்ட் குறித்து காக்க படத்தின் நினைவுகளை பகிர்ந்துக்கொண்டார். அப்போது இப்படத்தில் நடிக்க சூர்யா ஜோதிகா வந்தபோது இருவரும் நல்ல நண்பர்களாக தான் வந்தார்கள். அதன் பின் படத்தில் ஏற்பட்ட நல்ல நெருக்கம், ரொமான்ஸ் சீன்ஸ் இதெல்லாமே நிஜமாக தோன்றியது. அப்படித்தான் அவர்களின் காதல் மலர்ந்தது.

அது பார்க்க மிகவும் அழகா இருந்துச்சு… இருந்தாலும் அவர்களது காதலால் சில பிரச்சனைகளும் ஏற்பட்டது. ஆம், சூர்யா மீதுள்ள காதலால் ஜோதிகா அவரை டேக் கேர் பண்ண ஆரம்பித்தார். அதனால் அப்படத்தின் முக்கியமான ஸ்டண்ட் சீன் ஒன்றில் நடிப்பது மிகவும் ரிஸ்க் என்பதால் சூர்யா நடிக்க கூடாது என ஜோதிகா எச்சரித்தாராம். சூர்யாவும் ஜோதிகா பேச்சை கேட்டு நடிக்கமாட்டேனு சொல்லிட்டாரு. அதன் பிறகு நான் என் நண்பனை தண்ணீரில் குதிக்க வைத்து அவன் ஆழம், எவ்வளவு பாதுகாப்பு என்பதையெல்லாம் தெரிந்துக்கொண்டு மேலே வந்தான். அதன் பிற சூர்யா டூப் வேண்டாம் நான் நடிக்கிறேன் என கூறினார் என கெளதம் மேனன் தெரிவித்துள்ளார்.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 737

    6

    4