அஜித்தை அசிங்கப்படுத்தி சூனியம் வைத்துக் கொண்ட லோகேஷ்.. வீடியோவை வெளியிட்டு வெச்சு செய்யும் ரசிகர்கள்..!
Author: Vignesh7 August 2023, 2:30 pm
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் நடிப்பை தாண்டி பைக் ரேஸ், கார் ரேஸ், துப்பாக்கி சுடுதல், சுற்றுலா செல்லுவது என தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவார். குறிப்பாக பைக் ரேஸில் ஆர்வமிக்கவர் அஜித். அவர் வழக்கமாக, ஒரு படத்தை நடித்து முடித்து விட்டால், பைக் ரைடிங் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
இவர், கடைசியாக வெளிநாடுகளில் பைக் ரைடு செய்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியது. மேலும், AK மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து பைக் ரெய்டு சென்று ஜாலியாக என்ஜாய் பண்ணும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.
இதனிடையே அஜித் விடாமுயற்சி படத்தில் கமிட்டாகி இருந்தும் அப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து பைக் ரெய்டு செல்வதை அவரது ரசிகர்களும் விரும்பவில்லை. முன்பெல்லாம் ஒரு படத்தை முடித்த பின்னர் ரிலாக்ஷேஷனுக்காக தான் பைக் ரெய்டு செல்வார். ஆனால், தற்போது கேப் விட்டு கேப் விட்டு பைக்கிலே டூர் செல்வதால் ரசிகர்கள் அஜித் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.
அண்மையில் தான் நியூசிலாந்துக்கு சுற்றுலா சென்று திரும்பினார். தற்போது மீண்டும் பைக்கிலே வேர்ல்ட் டூர் ட்ரிப் அடித்துள்ளார். சமீபத்திய போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி செம வைரலானது.
இதனிடையே, அஜித் படப்பிடிப்பிற்கே வரா மாட்டுகிறார், அவரால் தான் ஷுட்டிங் லேட் ஆகிறது என்று கூறப்படுகிறது. இதை கலாய்த்து பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். தற்போது அப்படி ஒரு வீடியோ வர அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்து, பின் அன் லைக் செய்ய, ரசிகர்கள் அதை எப்படியோ பார்த்து, லோகேஷை திட்டி வருகின்றனர்.
@Dir_Lokesh liked 😲😲 pic.twitter.com/LG27DTllui
— 𝙿𝚁𝙰𝙱𝙰 𝙲𝙷𝙰𝙿𝙻𝙸𝙽 (@Chaplin_Here45) August 6, 2023