அந்த குதிரைக்கு ஒன்னும் ஆகாது இல்ல.. பிரபல நடிகரை கலாய்த்து தள்ளிய சிவாஜி கணேசன்..!
Author: Vignesh8 August 2023, 1:30 pm
சிவாஜி கணேசன் புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் விழுப்புரம் சின்னையா மன்ராயா் கணேசமூர்த்தி ஆகும். ஆரம்பத்தில் மேடை நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த சிவாஜி கணேசன், 1952 இல் பி. ஏ. பெருமாள் முதலியார் என்பவர் தயாரித்த பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.
வித விதமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து அதில் திறம்பட நடிப்பது இவரின் தனி திறனாகும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 288 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரைப்படத்துறையில் 250 படங்களுக்கு மேல் கதாநாயகனாக நடித்த ஒரே நடிகர் சிவாஜி கணேசன்.
பராசக்தியில் அறிமுகமான சிவாஜி சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது மகன் பிரபு தமிழில் முன்னணி நடிகராக வளம் வந்ததோடு இப்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், பிரபு முதன்முதலாக நடிக்க தொடங்கிய சமயத்தில் பல படங்களில் அவரது நடிப்பை சிவாஜி ஜாலியாக கலாய்ப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம். சொந்த மகனாக இருந்தாலும் பிரபுவை கலாய்ப்பதில் சிவாஜிக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளதாம்.
மணிரத்தினம் இயக்கிய ஒரு படத்தில் போலீஸ் கேரக்டரில் பிரபு நடித்துள்ளார். பிரபுவின் கேரியரில் மிக முக்கியமான படமாக இது அமைந்தது. கார்த்தியுடன் அடிக்கடி மோதிக் கொள்ளும் செம மாசான கேரக்டர் அது. இந்த போலீஸ் கெட்டப்காக உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும் என மணிரத்தினம் கூறியதால் தினமும் குதிரை ஏறும் பயிற்சியை எடுத்துள்ளார் பிரபு.
தினமும் அதிகாலை பிரபு வீட்டில் இருந்து வெளியே செல்வதை பார்த்த சிவாஜி “என்னப்பா துரை தினமும் காலங்காத்தால அப்படி எங்க தான் போயிட்டு வரீக…” என கேட்டுள்ளார். அதற்கு பிரபு குதிரை பயிற்சி எடுக்க என சொன்னதும் “க்ளூக்” என சிரித்து விட்டாராம் சிவாஜி.
அதோடு இல்லாமல் அது சரி அந்த குதிரைக்கு ஏதும் ஆகிறது இல்லப்பா.. என பிரபுவின் எடையை குறிப்பிட்டு கிண்டலும் செய்துள்ளாராம். இதனை டூயட் படத்தில் நடிக்கும் போது படப்பிடிப்புக்கு சென்ற வைரமுத்துவிடம் பிரபு கூறியுள்ளார்.
அதே நேரம் டூயட் படத்திற்காக பிரபுவின் உடல் எடையை வைத்து ஒரு பாடல் எழுத வேண்டும் என ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். விடுவாரா வைரமுத்து, பிரபு சொன்னதை வைத்து அவர் எழுதிய “கத்தரிக்காய் கத்தரிக்காய்” என்ற பாடலில் சிவாஜி கிண்டல் செய்ததை கவித்துவமாக மாற்றிவிட்டாராம் வைரமுத்து.
கத்திரிக்காய் என்ற பாடலில் “குண்டான உடம்பு இழைக்க குதிரை சவாரி செஞ்சா குதிரை தான் இழைச்சு போகுமாம் சொன்னாங்க வீட்டில்”… என்ற வரியை சேர்த்து பிரபுவுக்கே சப்ரைஸ் கொடுத்துள்ளார் வைரமுத்து. இப்படி பலமுறை பிரபுவை சிவாஜி கலாய்த்துள்ளது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.