ஜெயிலர் பட டிக்கெட் வாங்குவதில் தகராறு… தியேட்டர் மேலாளரை தாக்கிய ரஜினி ரசிகர்கள்.. மருத்துவமனையில் அனுமதி!!

Author: Babu Lakshmanan
8 August 2023, 11:45 am

திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் அராஜகம். ஜெயிலர் திரைப்படம் டிக்கெட்டை கூடுதலாக கேட்டு தியேட்டர் மேலாளரை ரஜினி ரசிகர்கள் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் திரைப்படம் வருகின்ற பத்தாம் தேதி தமிழகம் முழுவதும் வெளிவர உள்ளது. இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்திற்கான ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்வது தொடர்பாக பல்வேறு மாவட்டங்களில் திரையரங்கின் முன் ரஜினி ரசிகர்கள் அதிகமாக படையெடுத்து வருகின்றனர்.

அதேபோல், திண்டுக்கல்லில் உள்ள ராஜேந்திரா, உமா திரையரங்கில் டிக்கெட் தொடர்பான ஆன்லைன் பதிவு குறித்து திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் விசாரித்ததாக கூறப்படுகிறது.

இதில், நந்தவனப் பட்டியைச் சேர்ந்த கண்ணன் என்பவரும், நெட்டு தெரு ஜோசப் ஆகிய இருவரும் திரையரங்கு மேலாளர் மாயாண்டியிடம் கூடுதலாக டிக்கெட் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள், பின்னர் காதில் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, திரையரங்கு மேலாளர் மாயாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?