ரஜினியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்கிய அறிமுக நடிகை – தலைவரே பொறாமைப்பட்ட தருணம்!

Author: Shree
8 August 2023, 4:59 pm

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு தற்போது 72 வயது ஆகிறது. இன்னுமும் ஸ்லிம் பிட் தோற்றத்தை வைத்து மாஸ் ஹீரோவாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவருக்கு அடுத்து எத்தனை இளம் நடிகர்கள் வந்தாலும் கனவில் கூட சூப்பர் ஸ்டார் இடத்தை யாராலும் நிரப்பவே முடியாது.

ரஜினி இந்த இடத்தை பிடிக்க மிகவும் கஷ்டப்பட்டு தான் வந்துள்ளார். இயற்கையிலே தனக்கிருந்த ஸ்டைல், நடை இதெல்லாம் பார்த்து சினிமா அவரை அலேக்கா தூக்கிக்கொண்டது. ஆம், ரஜினி பள்ளிப்படிப்பை முடித்தவுடன் பெங்களூரில் நடத்துனராக வேலைபார்த்துள்ளார். இந்த வேலை கிடைப்பதற்கு முன்னர் கூலி வேலை செய்துள்ளார். ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் பின்னர் முறையாக மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டிடியூட்டில் நடிப்பு கலை கற்று தனது நண்பன் ராஜ் பகதூர் உதவியுடன் சினிமாவில் நுழைந்தார்.

அதன் பின்னர் இயக்குனர் கே. பாலசந்தரின் கவனத்தில் ஈர்க்கப்பட்ட ரஜினிகாந்த் அவரது இயக்கத்தில் 1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். தொடர்ந்து வில்லன் ரோல்களில் சில படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் ஹீரோவாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரஜினிகாந்த் ஆரம்ப காலத்தில் மிகவும் குறைவான சம்பளமே வாங்கினாராம்.

ஆம், மூன்று முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஸ்ரீ தேவி அப்படத்தில் நடிக்க ரூ. 5 ஆயிரம் சம்பளம் வாங்கியுள்ளார். ஆனால் ரஜினிக்கு வெறும் ரூ 2. ஆயிரம் மட்டும் கொடுத்தார்களாம். இதனால் ரஜினி ஸ்ரீ தேவியை பார்த்து பிரம்மித்து போனாராம். கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து சூப்பர் ஸ்டார் என்ற அசைக்க முடியாத இடத்தை பிடித்திருக்கும் ரஜினி தற்போது ரூ.110 கோடி சம்பளம் வாங்குவது குறிப்பிடத்தக்கது. இன்று இத்தனை கோடிகள் சம்பாதிக்கும் ரஜினி அன்று ஹீரோயினை விட கம்மியாக சம்பளம் வாங்கியிருப்பது வியக்க வைக்கிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?