தங்கத்தால் மனைவியை அலங்கரித்த சிவகார்த்திகேயன்… ரொமான்ஸ் கொஞ்சம் ஜாஸ்தி தான்(வீடியோ)

Author: Shree
9 August 2023, 9:42 am

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பெரிய விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். எந்த ஒரு பின்புலனும் இல்லாமல், டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக வலம் வந்து முன்னணி நடிகராக உயர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சிவகார்த்திகேயன் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2012ம் ஆண்டு வெளியான மெரினா திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகம் ஆனார். தொடர்ந்து மனம் கொத்திப் பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தபடாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, ரஜினி முருகன், ரெமோ, டாக்டர் உள்ளிட்ட பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

நடிப்பையும் தாண்டி தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி அதிலும் வெற்றி பயணத்தை துவக்கியுள்ளார். மேலும் பாடலாசிரியாகராகவும் வலம் வருகிறார். இப்படி தன் திறமையை வெளிப்படுத்தி பன்முக திறமை மூலம் வெற்றி கொடி நாட்டி வருகிறார்.

இவர் கடந்த 2010ம் ஆண்டு தன்னுடைய மாமா மகளான ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகிறார்கள். இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன் மனைவி ஆர்த்தியுடன் திருமண விருந்து சாப்பிடும் அழகான ரொமான்டிக் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஆர்த்தி கழுத்து நிறைய எக்கச்சக்கமான தங்க நகைகளை அணிந்திருக்கிறார். இது கிட்டதட்ட 100 பவுன் இருக்கும் போலயே என எல்லோரும் வியந்தது மட்டும் அல்லாமல் இது அத்தனையும் சிவகார்த்திகேயன் தான் தன் மனைவியாக வரப்போகும் ஆர்த்திக்கு வாங்கி அணிவித்திருக்கிறார் போல என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?