இவ்ளோவ் பெரிய மகன் இருக்கும்போது ரெண்டாவது கல்யாணம்…. சீரியல் நடிகையை நாக்கு புடுங்குற மாதிரி கேட்கும் நெட்டிசன்ஸ்!
Author: Shree9 August 2023, 11:47 am
தொகுப்பாளினியாக இருந்து பின்னர் சீரியல்களில் நடித்துப் பிரபலமானவர் மகாலட்சுமி. அழகான பப்ளி முகம், பொம்மை போன்ற தோற்றம் கொண்டும் சீரியல்களில் வில்லியாக நடித்தது தான் அனைவரையும் கவர்ந்தது.
இவர் அனில் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு ஒரு ஆண் குழந்தை பெற்றார். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பினால் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டார். அதன் பின்னர் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்து ஈஸ்வர் என்பவருடன் தகாத உறவில் இருந்ததாக ஈஸ்வரின் மனைவி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார்.
அதன் பின்னர் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இந்த ஜோடி தொடர்ந்து உருவ கேலிக்கு ஆளாகினர். அதையடுத்து ரவீந்தர் தனியாக எடுத்துக்கொண்ட போட்டோக்களை வெளியிட்டு வாழ்க்கை சோகமாகவும், கசப்பாகவும் இருப்பதாக பதிவுகளை போட்டிருந்தார். இதனால் அவர்கள் விவாகரத்து செய்யப்போவதாக வதந்திகள் வெளியானது.
இது குறித்து மனம் திறந்து பேசியுள்ள ரவீந்தர், உண்மையில் எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை. என் மனைவி மீடியாவில் இருப்பதால் ஷூட்டிங் முடிந்து லேட்டா வருவாள். எவ்வளவு லேட்டாக வந்தாலும் எத்தனை மணியானாலும் எனக்காக சமைத்து கொடுப்பாள். அதையும் மீறி எங்களுக்குள் சில சண்டைகள் வந்துள்ளது.
அப்போதெல்லாம் நான் நடிப்பை நிறுத்தி விடவா என்று கேப்பாள். அதுமட்டும் அல்லாமல் என் அம்மாவிடம், மகாலட்சுமி மீது ஏரளமான வருத்தங்கள் வந்தாலும் மகாலட்சுமி இதுவரை என் அம்மாவை பற்றி எதுவும் என்னிடம் சொன்னதில்லை. அவள் பல பிரச்சனைகளை சகித்துக்கொண்டு என்னுடன் சந்தோஷமாக வாழ்கிறாள் என கூறினார்.
இவர்கள் எவ்வளவு மகழ்ச்சியாக இருந்தாலும் சமூகவலைதளவாசிகள் எதையேனும் வைத்து ட்ரோல் செய்வதையே வேலையாக வைத்துள்ளார்கள். இந்நிலையில் மகனின் பிறந்தநாள் போட்டோவை வெளியிட்டு என் குட்டி இளவரசருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்… உங்களுக்கு அருமையான பிறந்த நாள் என்று நம்புகிறேன் மற்றும் வரவிருக்கும் சிறந்த ஆண்டுக்கு வாழ்த்துக்கள், நீ என் அழகான குட்டி பூசணிக்காய்… உன்னை என் பையனாக பெற்றதற்கு நான் என்றென்றும் பாக்கியவான லவ் யூ சச்சா என கூறி பதிவிட…. எல்லாம் சரி இவ்ளோவ் பெரிய பையன் வச்சிக்கிட்டா ரெண்டாவது கல்யாணம் பண்ணீங்க? பணத்துக்காக இப்படியா?என ட்ரோல் செய்துதள்ளியுள்ளனர்.