தாராளமா கொடுக்கலாம் … ரஜினியின் மனைவியாக நடித்த ரம்யா கிருஷ்ணனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author: Shree
9 August 2023, 1:05 pm

தென்னிந்தியத் திரைப்பட நடிகையான ரம்யா கிருஷ்ணன் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80ஸ் , 90ஸ் களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது.

போதாக்குறைக்கு, ஜெயலலிதாவின் நிஜ வாழ்க்கையை மையப்படுத்தி வெளிவந்த Queen Web series Hit அடிக்க, அம்மணியை பயங்கர Happy. தொடர்ந்து தெலுங்கு , தமிழ் என படு பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார். தற்போது 52 வயதாகும் ரம்யா கிருஷ்ணன் இன்னும் அதே இளமையோடு அழகாக இருக்கிறார். இவர் 2003ம் ஆண்டு தெலுங்கு பட இயக்குனர் கிரிஷ்ண வம்சியை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

ரம்யா கிருஷ்ணன் தற்போது ரஜினியின் மனைவியாக ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள ரம்யா கிருஷ்ணன் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ரஜினிக்கு மனைவி ரோலில் நடிக்க ரம்யா கிருஷ்ணன் ரூ. 80 லட்சம் சம்பளம் வங்கியுள்ளாராம். இதை அறிந்த நெட்டிசன்ஸ் தாராளமாக கொடுக்கலாம்…. ரம்யா கிருஷ்ணனின் மவுஸுக்கும் அவரது நடிப்பிற்கும் இதைவிட அதிகமாகவே கொடுத்திருக்கலாம் என கூறி வருகிறார்கள்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 543

    0

    0