மாற்றுத்திறனாளி பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய வாலிபர்கள் : பெட்ரோல் பங்கில் பரபரப்பு.. ஷாக் வீடியோ!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2023, 5:02 pm

மாற்றுத்திறனாளி பெண்ணை கண்மூடித்தனமாக தாக்கிய வாலிபர்கள் : பெட்ரோல் பங்கில் பரபரப்பு.. ஷாக் வீடியோ!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு கடைத்தெருவில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியராக பணியாற்றி வருபவர் தீர்த்தகிரி நகரை சேர்ந்த மாற்றுதிறனாளி கோவிந்தம்மாள் (22).

இவர் நேற்று மாலை பணியில் இருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் 300 ரூபாய்க்கு பெட்ரோல் போடசொல்லி ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் 300 ரூபாய் அனுப்பி உள்ளார்.

ரூபாய் 300-க்கு பெட்ரோல் போட்டதும்,150-ரூபாய் திருப்பி கேட்டுள்ளனர். அந்த பெண் 300 ரூபாய்க்கும் பெட்ரோல் போட்டாகி விட்டது.
என கூறி உள்ளார்.

நான் 150-க்கு தான் பெட்ரோல் போடசொன்னேன்,எனவே மீதி 150 ரூபாய் பணம் தரவேண்டும் என தகாத வார்த்தைகளால் ஆபாசமாக பேசியுள்ளார். பேசியதுடன் மட்டும் நிற்காமல் பைக்கை விட்டு இறங்கி வந்து பெண்னை சராமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றார்.

இதனால் பலத்த காயமடைந்த பெண் ஊழியர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் ஊழியரை தாக்கிய மர்ம நபர் குறித்து சி.சி.டி.வி.காட்சியை ஆய்வு செய்து வருகின்றனர். பட்டப்பகலில் பெண் ஊழியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!