உங்க அம்மா கால்ல பால் ஊத்து… அலப்பறை பண்ண ரசிகரை அலேக்கா தூக்கி சென்ற போலீஸ்!
Author: Shree10 August 2023, 11:40 am
நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ளது. ‘ஜெயிலர்’ படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது. தமிழகத்தை தவிர, பிற மாநிலங்களில் அதிகாலையிலேயே படம் வெளியானது. கர்நாடகாவில் காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியானது.
தொடர்ந்து, தமிழகத்தில் 9 மணிக்கு படம் ரிலீஸாகியுள்ளது. படம் வெளியானதால் தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், ஆட்டம், பாட்டத்துடன் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினியின் மனைவியாக ரம்யா கிருஷ்ணனும், அவரது மகன் கேரக்டரில் வஸந்த் ரவியும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் கேமியோ ரோலில் மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், ஷிவ ராஜ்குமார் ஆகியோர் நடித்திருக்கின்றனர். வில்லனாக கயல் பட நடிகர் விநாயகன் நடித்துள்ளார்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒவ்வொரு தியேட்டரிலும் ரசிகர்கள் பட்டாசு வெடித்தும், பாலாபிஷேகம் செய்தும் மிகுந்த மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில நெல்லையில் ஜெயிலர் படம் பார்க்க வந்த ரசிகர் ஒருவர் தியேட்டரில் பால் அபிஷேகம் செய்தும் பட்டாசு வெடித்தும் பெரும் ரகளை செய்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த போலீசார் காவல் துறையினர் சட்டத்தை மீறி செயல்பட்டதாக கூறி அவரை கைது செய்தனர்.
பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய போலீசார், ” அந்த நபர் சட்டத்தை மீறி செயல்பட்டதால் கைது செய்தோம். பெத்த அம்மா காலில் போல் பால் ஊற்ற வேண்டும். படிக்க நூலகம் வர சொன்னால் வர மாட்டார்கள். ஆனால், இங்கே பால் அபிஷேகம் செய்வதை ஏற்று கொள்ள முடியாது. மேலும் ரகளையில் ஈடுபட்டு சட்டத்தை மீறி செயல்பட்டதால் தக்க தண்டனை கொடுக்கப்படும் என கூறியதால் தியேட்டரில் சில நிமிடம் பதற்றம் ஏற்பட்டது.