என் வாழ்க்கையிலே மிகச்சிறந்த காதல் அவங்க கூட தான்… வனிதா வெளிப்படை பேச்சு!

Author: Shree
11 August 2023, 12:00 pm

விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.

வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.

அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை வனிதா சமீபத்திய பேட்டி ஒன்றில் , தன் வாழ்க்கையிலே மிகச்சிறந்த காதல் எது என்ற கேள்விக்கு, என் குழந்தைகள் கூட இருப்பது தான் என பதில் அளித்தார். என் மகன் விஜய் ஸ்ரீ ஹரி உடன் இருந்த காதல் பர்ஸ்ட் சேப்டர், ஜோவிகா இரண்டாவது சேப்டர், ஜெய்னிதா மூன்றாவது சேப்டர். இதில் ஸ்ரீ ஹரி உடன் இருந்த நாட்கள் இன்னும் நினைவுகளாகவே இருக்கிறது என்றார்.

  • no individual is bigger than the sport tweet by vishnu vishal கிரிக்கெட்டை விட தனிநபர் பெரியவர் அல்ல- CSK அணியை விளாசிய விஷ்ணு விஷால்