காருக்குள் கலக்கல் போட்டோஷூட்.. லேடி சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் போட்டோ..!
Author: Vignesh11 August 2023, 4:30 pm
தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. ஒரு நடிகையாக இப்படி இருப்பது இது சாதாரண விஷயம் கிடையாது. தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான். மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நடிகை நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகனார், அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார்.

பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார். பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார்.
அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. தொடர்ந்து இருவரும் தங்களது வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார்கள்.
தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா தற்போது ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியிலும் களமிறங்கிவிட்டார். நயன்தாரா புதிய விளம்பரத்தில் நடித்துள்ள போட்டோஷூட் புகைப்படம் வெளியாகியுள்ளது. காருக்குள் இருந்து நயன்தாரா போஸ் கொடுத்து எடுத்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.