தலைவா…… ஜெயிலர் படத்தை பார்த்துவிட்டு கத்தி கூச்சலிட்ட விஜய் மகன் – வைரலாகும் வீடியோ!

Author: Shree
11 August 2023, 6:17 pm

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், ஜாக்கி ஷெராஃப், சுனில், விநாயகன், வசந்த் ரவி, யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் நேற்று திரைக்கு வந்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த தர்பார், அண்ணாத்த படங்களுக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனம் கொடுத்தனர். இதனால், எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. தற்போது ரஜினிகாந்த் ஜெயிலர் படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகம் முழுவதும் நேற்று வெளியான ஜெயிலர் படத்திற்கு, நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அனைத்து திரையரங்குகளும் ஃபுல் ஆன நிலையில், ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகின்றனர். ரஜினியின் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்து, பாட்டசு வெடித்தும், மேள தாளங்களுடன் ஆட்டம், பாட்டமாக இருந்தனர்.

முதல் நாளில் இந்தப்படம் ரூ.100 கோடி வரை வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், படத்தை பார்த்தவர்கள் அனைவரும் பாஸிட்டிவ்வான ரிவ்யூ கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த பிரபல இயக்குனர் ஏஎல் விஜய்யின் 3 வயது மகன் துருவா ” தலைவா” என கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த குட்டி சிறுவன் ரஜினியின் இவ்வளவு வெறித்தனமான ரசிகனா என எல்லோரும் வியந்து கமெண்ட்ஸ் செய்து வருகிறார்கள்.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!