80களின் காலகட்டத்தில் இருந்து இன்றுவரை தமிழ் சினிமாவை பொறுத்தவரை ஒரு தவிர்க்க முடியாத நடிகராக சத்யராஜ் இருந்து வருகிறார். முதலில் தயாரிப்பு உள்ளிட்ட பணிகளை செய்து வந்த சத்யராஜ் அதன் பிறகு தான் நடிகராக மாறினார். இவரின் பள்ளிக்கால நண்பரான மணிவண்ணனுடன் சத்யராஜு இணைந்து பல படங்களில் நடித்து அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அது மட்டுமல்லாமல் மணிவண்ணன் இயக்கிய பெரும் படங்களில் சத்யராஜ் நடித்து, இவர்களில் காம்பினேஷனில் நிறைய படங்கள் வெற்றியை கண்டுள்ளது.
கதாநாயகன் வில்லன் குணசித்திர கதாபாத்திரம் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இவர் எம்ஜிஆரின் தீவிர ரசிகர் பெரியாரின் தீவிர வெறியன் ஆகவும் இருந்திருக்கிறார். மேலும் தந்தை பெரியாராக நடித்த திரைப்படத்தில் ஊதியம் வாங்காமல் சத்யராஜ் அந்த படத்தில் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சத்யராஜ் உடைய சினிமா கேரியரில் நூறாவது நாள், ஜல்லிக்கட்டு, ரிக்ஷா மாமா, வில்லாதி வில்லன், வால்டர் வெற்றிவேல், அமைதிப்படை போன்ற படங்கள் இவரது நடிப்பிற்கு எடுத்துக்காட்டு என்று சொல்லலாம். இப்படி திரைத்துறையில் மதிப்புமிக்க ஒரு நடிகராக இருப்பவர் சத்யராஜ்.
இந்நிலையில் நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர்(94) வயது மூப்பின் காரணமாக இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு கோவையில் காலமானார். கோவையில் வசித்து வந்த நாதாம்பாளுக்கு சத்யராஜ் என்ற மகனும், கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தாயின் மரண செய்தி அறிந்து ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் இருந்த சத்யராஜ் கோவை விரைந்துள்ளார். செய்தி அறிந்து சத்யராஜின் தாயார் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.