மசூதி அருகே கிடந்த புதையல் பெட்டி..? பல மணி நேரம் போராடியும் திறக்க முடியாமல் திணறிய அதிகாரிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 9:23 am

வேலூர் மாவட்டம் குடியாத்தம், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது இம்திரியாஸ் இவர் கவுண்டன்யா ஆற்றங்கரை அருகே ஜோதிமடம் பகுதியில் தேங்காய் நார் கம்பெனி நடத்தி வருகிறார்

இவர் அவருக்கு சுமார் 1000 கிலோ எடை கொண்ட இரும்பு லாக்கர் பெட்டியை அதே பகுதியில் உள்ள மசூதிக்கு அருகில் நேற்று டிராக்டரில் இறக்கியுள்ளார் இந்த நிலையில் மசூதி அருகில் மர்மமான முறையில் இரும்பு பெட்டி இருப்பதாகவும் அதில் புதையல் இருப்பதாகவும் குடியாத்தம் நகர போலீசருக்கும் வருவாய் துறையினருக்கும் சிலர் தகவல் தெரிவித்தனர்

மேலும் இந்த தகவல் காட்டுத் தீயாய் பரவியது இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த குடியாத்தம் டிஎஸ்பி ராமமூர்த்தி மற்றும் குடியாத்தம் நகர போலீசார் மற்றும் வருவாய் கோட்டாட்சியர் வெங்கட்ராமன் தாசில்தார் விஜயகுமார் விசாரணை நடத்தினர்

பின்னர் இரும்பு பெட்டியை உடைக்க வருவாய்த் துறையினர் திட்டமிட்டனர் பின்னர் சுமார் அரை மணி நேரம் போராடி பெட்டியை உடைக்க முடியாத நிலையில் பின்னர் இயந்திரம் மூலம் உடைக்க முடிவு செய்து இயந்திரம் வரவழைக்கப்பட்டு பெட்டியை அறுக்க முடியவில்லை பல மணி நேரமாக பெட்டியை உடைக்க முடியாமல் அதிகாரிகள் திணறி வந்தனர்

மேலும் இதுகுறித்து முகமது இம்திரியாஸிடம் கூறும் போது 25 ஆண்டுகளுக்கு முன்பு அதை விலைக்கு வாங்கியதாகவும் தற்போது அதனை வைத்து பராமரிக்க முடியாது என்பதால் மசூதிக்கு வழங்க இங்கே எடுத்து வந்து வைத்து விட்டு சென்றதாகவும் கூறினார்.

மேலும் அருகே உள்ள ஆற்றில் தற்போது பணிகள் நடைபெற்று வருவதால் சிலர் அதை தவறாக புரிந்து கொண்டு ஆற்றில் இருந்து எடுத்து வந்ததாக தகவல் பரவியதாகவும் தெரிவித்தார்.

மேலும் தற்போது பெட்டி உடைக்கும் பணியில் வருவாய்த் துறையினர் மற்றும் காவல் துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் இதனால் குடியாத்தம் பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது

நேற்று இரவு வரை எவ்வளவு போராடியும் அந்த இரும்பு லாக்கரை உடைக்க முடியாத காரணத்தினால் குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அதிகாரிகள் முன்னிலையில் அந்த இரும்பு லாக்கர் சீல் வைக்கப்பட்டது.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 544

    0

    0