நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!!

Author: Udayachandran RadhaKrishnan
12 August 2023, 9:43 am

நாங்குநேரியில் பள்ளி மாணவர் மற்றும் அவரது தங்கையை வெட்டிய சம்பவத்தில் திருப்பம்… மேலும் ஒரு மாணவன் கைது!!

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் முனியாண்டி என்பவரது மகன் சின்னதுரை (வயது 17) வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவரது மகள் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் சின்னதுரை படிக்கும் பள்ளியில் பயிலும் சில சக மாணவர்கள் அவர் மீது சாதிய ரீதியாக பாகுபாடு காட்டி துன்புறுத்தியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த சின்னத்துரை பள்ளி செல்ல மறுத்து வீட்டில் இருந்துள்ளார். இந்த விவரம் அறிந்த ஆசிரியர் சாதிய ரீதியில் பாகுபாடு காட்டிய சக மாணவர்களை கண்டித்துள்ளார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்த அந்த குறிப்பிட்ட மாணவர்கள் சின்னதுரையை பழிவாங்க எண்ணி மாணவன் வீட்டுக்கே சென்று மாணவனை அறிவாளால் பல இடங்களில் வெட்டி உள்ளனர். அதனை தடுக்க சென்ற அவரது தங்கையையும் அந்த கும்பல் வெட்டி உள்ளது இருவரும் அரிவாள் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சாதிய ரீதியிலான கொடூர தாக்குதலில் ஈடுபட்ட 6 பள்ளி மாணவர்களை காவல்துறையினர் உடனடியாக கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரும் 18வயதுக்கு கீழ் உள்ளவர்கள். அவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாங்குநேரி நம்பி நகர் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் எனும் இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!