நாங்குநேரி சம்பவம்: மாணவர்கள் மட்டும் இல்ல ஆசிரியரே அப்படித்தான்… திடுக்கிட வைக்கும் பின்னணி!
Author: Shree12 August 2023, 3:52 pm
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் உள்ள பெருந்தெரு பகுதியை சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி அம்பிகா. இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் பெயர் சின்னத்துரை. மகனுக்கு 17 வயது ஆகிறது. அவர் சின்னத்துரை வள்ளியூரில் உள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பள்ளியில் மேற்கத்திய ஜாதியை சேர்ந்த மாணவர்கள் சின்னத்துரையை ஜாதி ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
மேற்கத்திய ஜாதியை சேர்ந்த மாணவர்கள் சின்னத்துரையை இட்லி வாங்கிட்டு வா, சிக்ரெட் வாங்கிட்டு வா என்றெல்லாம் வேலைக்காரன் போல் நடத்தியுள்ளனர். பல பேர் முன்னணியில் அடிப்பது, நோட்டு புத்தங்களை வாங்கி கிழிப்பது என மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் அவ்வப்போது துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் மிகுந்த வேதனைக்குள்ளாகிய சின்னத்துரை வீட்டில் உள்ள தனது பெற்றோரிடம் நடந்த விஷயத்தை கூறி அழுததோடு பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே தங்கியுள்ளார்.
மகனின் வாழ்க்கை இப்படியே பாழாகிவிடும் என்ற அச்சத்தில் சினத்துறையின் அம்மா அம்பிகா பள்ளிக்கு சென்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து பள்ளி நிர்வாகம் சம்மந்தப்பட்ட மேற்கத்திய ஜாதி மாணவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் மேற்கத்திய சாதியை சேர்ந்த மாணவர்களின் பெற்றோர் ஒருவர் ஆளுங்கட்சியை சேர்ந்தவர் என கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் தன் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் அதை அவமானபிரச்சனையாக நினைத்து வியாழக்கிழமை இரவு சுமார் 10 மணி அளவில் 6 பேர் வந்து அதில் 3 பேர் வீட்டின் வெளியில் காவலுக்கும் 3 பேர் உள்ளே நுழைந்தும் அரிவாள் எடுத்து சினத்துரையை கை, கால், இடுப்பு என சராமாரியாக வெட்டின இடத்திலே திரும்ப திரும்ப வெட்டியுள்ளனர். இதை பார்த்து பதறியடித்து தடுக்க முயன்ற சின்னத்துரையின் தங்கையையும் வெட்டிவிட்டு ஓடிவிட்டார்கள். அந்த ரத்த காயத்தை பார்த்த சின்னத்துரையின் தாத்தா அதிர்ச்சி அடைந்து ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார். அவரது இறுதிச்சடங்கு நேற்று தான் நடந்துள்ளது.
இதையடுத்து அண்ணன் தங்கை இருவரும் உயிருக்கு போராடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து போலீசாருக்கு புகார் கொடுத்ததும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து யாரும் பெருசா ரியாக்ட் பண்ணவே இல்லை. வியாழக்கிழமை இரவு நடந்த இச்சம்பவம் பற்றி நேற்று மதியம் வரை வெளியில் தெரியவே இல்லை. அதன்பின்பு தான் சமூகவலைத்தளங்களில் பரவி செய்தியாக வெளிவந்தது. இந்த சம்பவத்தை அடுத்து ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. ஆம், கிட்டத்தட்ட 50 பேருக்கு இருந்த அந்த பகுதியில் ஊரையே காலிபண்ணிட்டு வேற ஊருக்கு சென்றுவிட்டார்களாம்.
இது இப்போ மட்டும் இல்லை பல வருடமாக அந்த பகுதியில் நடந்து வருகிறது. சின்னத்துரை புகார் கொடுத்ததால் வெளியில் தெரிந்தது. தெரியாத கேஸ் எத்தனையோ இருக்கு. இது பள்ளி மாணவர்களிடம் மட்டுமில்லை ஆசியர்களிடமும் உள்ளது. குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த ஆசியர்கள் ஒரு கேங் ஆகவும் தாழ்த்தப்பட்ட ஆசியர்கள் ஒரு கேங் ஆகவும் இருக்கிறார்கள். இதுவே மாணவர்களை தவறான வழியில் கொண்டு செல்கிறது. இது போன்ற பிரிவினை சமுதாயத்தை சீரழிக்கும் என க்ரைம் செல்வராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையே உருக்குலைய செய்துள்ளது. இக்குற்றச்சம்பவத்தில் ஈடுபட்ட அந்த 6 மாணவர்களும் சிறார்கள் என்பதால் போலீஸ் பிடியில் உள்ளனர். அந்த சிறுமி தனது வாக்குமூலத்தில் 4 அண்ணன்கள் வந்து வெட்டிட்டு போயிட்டாங்க” எனும் கூறும்போது நெஞ்சு கனக்கிறது. மாணவச் சமுதாயம் தான் நாளைய இந்தியா எனும் சொல்லும் வேளையில் இது போன்று சாதி நஞ்சு அவர்களின் மனத்தில் கலந்தது வேதனைக்குள்ளாக்கியுள்ளது.