மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்… சென்னை திரும்பினார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

Author: Udayachandran RadhaKrishnan
13 August 2023, 4:12 pm

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு நேற்று திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெங்களூரு-ஓசூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் உடல் நிலை சீராக உள்ளது என்று பெங்களூரு மருத்துவமனை விளக்கம் அளித்தது. உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக நலம் விசாரித்தார்.

இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் முழுமையாக குணமடைந்து மருத்துவமனையில் இருந்து தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கார் மூலம் சென்னை புறப்பட்டுள்ளார். இருப்பினும் அவர் சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி