திரிஷாவை கரம் பிடிக்கும் விஜய்..? சினிமா பிரபலம் வெளியிட்ட விஷயம்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்..!

Author: Rajesh
13 August 2023, 5:15 pm

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் “தளபதி” என்று ரசிகர்களால் அழைக்கப்படும் முன்னணி நடிகராக சிறந்து விளங்கி வருகிறார். ஆரம்பத்தில் இவர் தந்தை இயக்கத்தில் நடித்து, அதன் பின்னர் பல முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்து தனக்கென சினிமாவில் இடம் பிடித்தார். தற்போது இவர், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் விஜய், திரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஸ்கின், சஞ்சய் தத் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. நீண்ட இடைவெளிக்கு பிறகு, விஜய் – திரிஷா இணைந்து நடித்துள்ளனர்.

இதன் நடுவே, சங்கீதாவுடன் விவாகரத்து, நடிகையுடன் இரண்டாம் திருமணம், பெற்றோரை மதிக்காமல் இருக்கும் விஜய் என பல வதந்திகள் அடுக்கடுக்காக விஜய் மீது கிளம்பி வந்தது. தற்போது, விஜய் – திரிஷா காதல் குறித்து கிசுகிசுக்கப்படுகிறது. ஷூட்டிங் முடிந்த கையேடு தற்போது இருவரும் நார்வே நாட்டிற்கு வெக்கேஷன் சென்றுள்ளதாக போட்டோ ஒன்று செம வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை சிலர் எடிட் என்றும், சிலர் உண்மை புகைப்படம் தான் என்றும் கமண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல சினிமா பத்திரிகையாளர் அந்தணனிடம் பேட்டியில் தொகுப்பாளர் ஒருவர்,”விஜய் திரிஷா ரீல் ஜோடியா, ரியல் ஜோடியா?” என கேட்டிருந்தார்.

இதற்கு பதில் அளித்த அவர், “ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாற பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. இந்த தகவல் உண்மையா பொய்யா என தெரியவில்லை, ஆனால் சினிமாவில் என்ன வேணாலும் நடக்கலாம்” என்று அந்தணன் கூறியுள்ளார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 470

    1

    0