ஆளுநரை பார்த்து சிரிப்பதா..? அழுவதா..? என தெரியல ; யார் கொடுத்தது அதிகாரம் ; ப.சிதம்பரம் கடும் விமர்சனம்..!!

Author: Babu Lakshmanan
14 August 2023, 1:16 pm

புதுக்கோட்டை ; நீட் விலக்கு மசோதாவில் கையொப்பமிட மாட்டேன் என்று கூறுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திருமயம் சட்டமன்றத் தொகுதி ராயவரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்து பேசினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னால் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரம் கூறியதாவது :- ஆளுநரை தாண்டி இந்திய குடியரசு தலைவர் தான் நீட் விலக்க மசோதாவிற்கு கையெழுத்து போட வேண்டுமா..? வேண்டாமா..? என்று முடிவு செய்ய வேண்டும்.

மாநில ஆளுநரை தாண்டி போய்விட்டது. மாநில ஆளுநருக்கு அதிகாரமே கிடையாது. தனக்கு இல்லாத அதிகாரத்தை தான் செயல்படுத்த மாட்டேன் என்று சொல்வதற்கு என்ன பெருமை. இவருக்கு அதிகாரமே கிடையாது. இல்லாத அதிகாரத்தை செயல்படுத்த மாட்டேன் என்று ஆளுநர் கூறுகிறார். இதற்கு அழுவதா..? சிரிப்பதா..? என்று தெரியவில்லை, என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசுப்புராம், வட்டார தலைவர்கள் ராம் அர்ஜுனன் கணேசன், திருமயம் வட்டாரத் தலைவர் முருகேசன், அக்பரலி மகுடமுடி மலைக்கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • actress Abort his Fetus After Famous Actor Warned வாரிசு நடிகருடன் கூத்து… கருவை சுமந்த நடிகை : காத்திருந்த டுவிஸ்ட்!