சாய் பல்லவி மட்டும் சிக்கியிருந்தா வேற மாதிரி சம்பவம்.. பிரபல நடிகரின் வலையில் சிக்கி சின்னா பின்னமான கீர்த்தி சுரேஷ்..!

Author: Vignesh
15 August 2023, 2:00 pm

கீர்த்தி சுரேஷுக்கு அறிமுகமே தேவையில்லை அந்த அளவுக்கு பெரிய நடிகையாகி விட்டார் இருந்தாலும் இவரின் ஆரம்ப கால கட்டத்தை சற்று அலசிப் பார்த்தால், 2015- ஆம் ஆண்டில் விக்ரம் பிரபுவுடன் “இது என்ன மாயம்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினி முருகன் படம் தான் வேற லெவலில் கீர்த்தி சுரேஷை உயர்த்தியது.

அதன் பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் ரெமோ படத்தில் நடித்து இளைஞர்கள் மனதை கொள்ளையடித்தார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகைகளில் ஒருவராக வந்தா கீர்த்தி சுரேஷ். அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, தனுஷ், விக்ரம் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலம் அடைந்தார், சில வருடங்களுக்கு முன்பு கூட நடிகையர் திலகம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழியில் முன்னணி நடிகையாக தற்போது கீர்த்தி சுரேஷ் ஜொலித்து வருகிறார். இவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். அடுத்தடுத்து கீர்த்தி சுரேஷுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. மாமன்னன் படத்தை தொடர்ந்து கண்ணிவெடி என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

keerthy suresh - updatenews360

இந்நிலையில், தெலுங்கு திரையுலகில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் சிரஞ்சீவி இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடிப்பில், ஆகஸ்ட் 11ஆம் தேதி போலோ ஷங்கர் படம் திரைக்கு வந்தது. இந்த படம் அஜித் நடித்த வேதாளம் ரீமேக். இப்படத்தின் விழா ஒன்றில் கீர்த்தியை பற்றி புகழ்ந்து பேசுகிறேன் என்று அவரை மிக தர்ம சங்கடம் ஆகியுள்ளார் சிரஞ்சீவி.

sai pallavi keerthy suresh-updatenews360

இந்நிலையில், சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளிவந்த இந்த போலோ சங்கர் திரைப்படத்தில் சிரஞ்சீவிக்கு தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் சமூக வலைதளத்தில் செம ட்ரோல் ஆகி வருகிறது. முன்னதாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சாய்பல்லவிடம் தான் பேச்சுவார்த்தை நடந்ததாம். நல்லவேளை சாய்பல்லவி தப்பித்து விட்டார் என்று அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 460

    0

    0