கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுன? அஜித்தை நம்பி பாதாள குழியில் விழுந்த சூப்பர் ஸ்டார்!

Author: Shree
15 August 2023, 11:31 am

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான தமிழ்த் திரைப்படம் வேதாளம். இப்படம் தீபாவளி அன்று வெளியானது. விஷேஷ நாளில் வெளியானதால் அஜித்தின் கோடிக்கணக்கான ரசிகர்கள் இப்படத்தை கொண்டாடி தீர்த்தனர்.

வெறும் 61 கோடியில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் இப்படம் சுமார் 125 கோடி வசூல் ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. இப்படத்தின் வெற்றியை பார்த்து அசந்துப்போன தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி வேதாளம் படத்தை தெலுங்கில் ரீமேக் செய்துள்ளார். அதில் அவரின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக தமன்னா நடித்திருந்தனர்.

போலா சங்கர் என்ற பெயரில் கடந்த 11ம் தேதி வெளியாகிய அப்படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டதாம். ஜெயிலருக்கு ஈடாக வெளியாகி பெரிய அடி வாங்கி விட்டதாம். ஒரே நேரத்தில் தமிழ் சூப்பர் ஸ்டாரும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் மோதியதால் எதிர்பார்ப்புகள் எகிறியது. ஆனாலும் ரஜினியை பீட் செய்யமுடியவில்லை.

இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு இவங்க செய்த அலப்பறை தாங்கமுடியவில்லை என்று தெலுங்கு ரசிகர்கள் கூறுகிறார்கள். அஜித்தின் வெற்றியை நம்பி அகல கால் வைத்த சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி இப்படி மோசம் போய்ட்டாரே என ரசிகர்கள் வருத்தமடைந்துவிட்டனர். இதையெல்லாம் பார்த்தால் வடிவேலு டயலாக் தான் நியாபகம் வருது, ‘கொஞ்ச நஞ்ச பேச்சாடா பேசுனீங்க..’ !

  • Kudumbasthan Movie Blockbuster Hit பட்டையை கிளப்பும் குடும்பஸ்தன்…அதுக்குள்ள சின்னத்திரையில்.. வெளியான மாஸ் அறிவிப்பு..!!