தேசியக் கொடியை ஏற்றிய தூய்மை பணியாளர்கள் : நெகிழ வைத்த விஜய் ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
15 August 2023, 11:46 am

கோவையில் 77வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை வைத்து தேசிய கொடியேற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் 77 ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை சுந்தராபுரம் பகுதியில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

தெற்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் விக்கி மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மை பணியாளர்களை அழைத்து கௌரவித்தனர்.

பின்னர் அவர்களை கொடியேற்ற வைத்து இனிப்புகளை பரிமாறி கொண்டனர். பொதுவாக அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் உயர் அதிகாரிகள்,அரசியல் கட்சி தலைவர்கள் கலந்து கொண்டு கொடியேற்றும் நிகழ்வுக்கு மாறாக விஜய் மக்கள் இயக்கத்தினர் தூய்மை பணியாளர்களை கொடியேற்ற வைத்த இந்த நிகழ்வு அப்பகுதி மக்கள் இடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Vijay And Trisha திரிஷாவை தவிர வேறு யார்? விஜய்யை சரமாரியாக விமர்சித்த பிரபல வாரிசு!