நான் பாலிவுட் நட்சத்திர நடிகரை காதலிக்கிறேன்… திருமணத்தை அறிவித்த தொகுப்பாளினி டிடி!

Author: Shree
15 August 2023, 4:27 pm

கியூட்டான ஸ்மைல், கலகலப்பான பேச்சு என மக்களை கவர்ந்த தொகுப்பாளினியாக டிடி என்கிற திவ்யதர்ஷினி இன்றும் ரசிகர்களின் பேவரைட் ஆங்கராக இருந்து வருகிறார். பிரபலங்களை நேர்த்தியாக கையாண்டு அவர்களை பேட்டி எடுத்து தனிப்பட்ட விஷயங்களை லகுவாக பேசி வாங்குவதில் சிறந்த ஆங்கராக டிடி பார்க்கப்படுகிறார்.

இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி தான். இவரின் நிகழ்ச்சிக்கு வரும் எந்த ஒரு பிரபலமும் முகம் சுளிக்கும் வகையில் இல்லாமல் கலகலப்பாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார். இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

இதனிடையே வாய்ப்புகள் கிடைக்கும் போதெல்லாம் சின்ன சின்ன ரோல்களில் படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் நல தமயந்தி, விசில், பவர்பாண்டி, துருவநட்சத்திரம், சர்வம் தாள மயம் உள்பட சில திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ஆனால், அந்த திருமணப் பந்தம் நீடிக்கவில்லை. இருவரும் சட்டப்படி பிரிந்து விட்டனர்.

அதை எல்லாம் கடந்து, தற்போது, 38 வயதாகும் DD இன்னும் அழகு மாறாமல் அதே இளமையுடன் ஜொலித்துக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக எதையேனும் பதிவிட்டு வரும் அவர் அண்மையில் கூட தனது இரண்டாம் திருமணம் குறித்து தொடர்ச்சியாக வெளியாகும் செய்திக்கு காட்டமாக பதில் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் தான் நட்சத்திர நடிகர் ஒருவரை காதலிப்பதாகவும் விரைவில் அவரது திருமணம் செய்யப்போவதாகவும் கூறியுள்ளார். ஆம், பிரபல பாலிவுட் நடிகரான ரித்திக் ரோஷனை தான் காதலிப்பதாக கூறியுள்ளார். மேலும் அடுத்த ஜென்மம் என ஒன்று இருந்தால் நான் இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானை திருமணம் செய்துக்கொள்வேன் என்றும் கூறியுள்ளார்.

  • Jana Nayakan Vijay ஜனநாயகன் கடைசி படம் அல்ல… சம்பவம் LOADING : இயக்குநரின் மாஸ் அறிவிப்பு!