நடக்க கூட முடியாத பரிதாப நிலையில் VJ கல்யாணி.. கடைசில இப்படி ஆயிருச்சே..!

Author: Vignesh
16 August 2023, 1:00 pm

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான விஜே கல்யாணி. அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் நடித்த பிரபலமானவர். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுப்பாளராக தொகுத்து வழங்கியுள்ளார். சின்னத்திரையில் பிரிவோம் சந்திப்போம், தாயுமானவர், ஆண்டாள் அழகர், போன்ற சீரியல்களில் முன்னணி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

vj kalyani-updatenews360

இவர் 2013 ஆம் ஆண்டில் இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவரான ரோகித்தை திருமணம் செய்தார். இவர்களுக்கு நவ்யா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது. பின்னர் இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

vj kalyani-updatenews360

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதில், அவர் நடக்க முடியாமல் செவிலியர்கள் உதவியுடன் நடந்து வருகிறார். அது குறித்து அவர் கூறியதாவது:- தான் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் மிகவும் சோர்வாக இருக்கிறேன். எனது உடல்நிலை சற்று மோசமாக உள்ளது. 2016 ஆம் ஆண்டு எனக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை நடந்தது.

vj kalyani-updatenews360

சிறிது காலம் நலமாக இருந்தேன். அதன் பிறகு தான் எனக்கு நவியா பிறந்தால் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் என் முதுகு தண்டுவட நிபுணருடன் ஆலோசனை செய்தேன். அப்போது அவர் இதற்கு முன் நடந்த அறுவை சிகிச்சையில் குணமாகவில்லை. இதனால், இந்த முறை ஸ்க்ரூவை அகற்றிவிட்டு இன்னொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள்.

vj kalyani-updatenews360

வேறு ஒருவருடைய முதுகுஎழும்பை பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்கள். இந்த முறை குணமடைய வெகு நாட்கள் ஆகும். என் கணவர் ரோகித் என் கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு நிற்கிறார். எனது ஐந்து வயது மகள் நவியா என் மீது காட்டிய பாசத்தை என்னால் நம்பவே முடியவில்லை என்று தெரிவித்துள்ளார். இவரது ரசிகர்கள் கமெண்டில் தற்போது ஆறுதலை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

  • Vanangaan Suriya Movie இதெல்லாம் நம்புற மாதிரியாங்க இருக்கு.. பாலா சொன்ன காரணம்.. Satisfied ஆகாத சூர்யா Fans!
  • Views: - 1021

    2

    0