இன்னும் கூட கொடுத்திருக்கலாம்… ஜெயிலர் வில்லன் விநாயகன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Author: Shree
16 August 2023, 2:35 pm

மலையாள திரைப்படத்தில் மிகவும் பிரபலமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் விநாயகன். இவர் பின்னணிப் பாடகர் மற்றும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார். தமிழில் கயல் படத்தின் ஹீரோவுக்கு நண்பராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். அந்த படம் இவருக்கு நல்ல அடையாளத்தை தேடி கொடுத்தது.

அதையது தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவரது நடிப்பை பலரும் பாராட்டி வருகிறார்கள். மிரட்டலான அவரின் நடிப்பை பார்த்து கோலிவுட்டில் பல முன்னனி இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் அவரை புக் செய்ய காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இப்படியான நேரத்தில் கடந்த இரண்டு நாட்களாக விநாயகன் குறித்த சர்ச்சையான விஷயம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மீடூ சர்ச்சையில் சிக்கி விமர்சனத்திற்குள்ளான நடிகர் விநாயகன், கடந்த ஆண்டு ஒரு படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார்.

அப்போது மீடூ சர்ச்சையில் பேசப்பட்டது குறித்து கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், நான் இதுவரை 10க்கு மேற்பட்ட பெண்களுடன் உடலுறவு வைத்திருக்கிறேன். ஆனால், அவர்கள் யாரையும் நான் கட்டாயப்படுத்தி படுக்கைக்கு அழைக்கவில்லை. ஒரு நடிகையை எனக்கு பிடித்துவிட்டால் வெளிப்படையாக கூப்பிடுவேன் என கூறி அதிர்ச்சி அளித்தார்.

இந்த விஷயம் தற்போது மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் விநாயகன் ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது. ஆம், இப்படத்தில் நடிக்க விநாயகன் ரூ. 35 லட்சம் சம்பளம் வாங்கினாராம். ஆனால், அவரது நடிப்பிற்கும் அவரது ரோலுக்கும் உள்ள முக்கியத்துவத்திற்கு இன்னும் கூட கொடுத்திருக்கலாம் என்கிறார்கள் ரசிகர்கள்.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…
  • Close menu