சூப்பர் ஸ்டார்னு எவனும் கிடையாது.. MGR பேரன் ஆவேசம்..!(வீடியோ)

Author: Vignesh
16 August 2023, 2:00 pm

நடிகர் விஜய் படங்கள் அதிக வசூல் ஈட்டுவதால் அவர்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் எனவும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார் எனவும் தொடர்ந்து கருத்து மோதல்கள் சமூக வலைதளங்களிலும் திரையுலக நட்சத்திரங்களுக்கும் இடையே ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே, சூப்பர் ஸ்டாராக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். 160க்கும் மேற்பட்ட படங்களில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். நெல்சன் இயக்கத்தில் அவரது 169வது படமாக இயக்குனர் ஜெயிலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

rajini - updatenews360

இதனிடையே ரஜினிகாந்திற்கு அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் யாருக்கு என்ற போட்டி விஜய், அஜித் ரசிகர்களிடையே பொரும் அக்கப்போரே நடைப்பெற்று வருகிறது. அப்படி அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்று வாரிசு ஆடியோ லான்சில் பல பிரபலங்கள் புகழ்ந்தும் வந்தனர். இதனை விஜய் ரசிகர்களும் கொண்டாடினர்.

rajini - updatenews360

இந்தநிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளரை சந்தித்த எம்ஜிஆர் பேரன் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறுகையில், சூப்பர் ஸ்டார்னா அது ரஜினிகாந்த் சார் மட்டும் தான் வேறு எவனும் கிடையாது என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?