ஒரு கையில் ஜெயிலர் பட டிக்கெட், மறு கையில் அதிமுக அழைப்பிதழ் : நூதன முறையில் அழைப்பு விடுத்த கடம்பூர் ராஜூ!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 2:13 pm

அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு வரும் 20-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ளது. இதற்காக மதுரை வலையன்குளம் ரிங் ரோடு பகுதியில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றப் பிறகு நடைபெறும் முதல் மாநாடு இதுவாகும். இதனால் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த பல்வேறு ஏற்பாடுகளை அதிமுக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மதுரையில் நடைபெற உள்ள அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகர்களை அழைப்பு விடுக்கும் வகையில், கோவில்பட்டி சத்தியபாமா திரையரங்கில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தின் காலை காட்சியை மொத்தமாக முன்பதிவு செய்துவிட்டு, படம் பார்க்க வருபவர்களுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு.

அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் வரும் நிலையில், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக தங்களின் பலத்தையும், செல்வாக்கையும் காட்டும் வகையில் மாபெரும் மாநாடாக இந்த எழுச்சி மாநாட்டை நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Radhika Sarathkumar Talk About Dhanush in Shooting Spot படப்பிடிப்பில் ‘அந்த’ நடிகை வந்தா தனுஷ் வாயை பிளந்துட்டு போவான்.. ராதிகா சொன்னது யாருனு பாருங்க!