Super Star கிட்டயே நல்ல Coffee கேட்டவன் தானே நீ? பரிசு கொடுக்க கூப்பிட்ட கலாநிதி மாறன் – கூச்சமே இல்லாமல் நெல்சன் என்ன கேட்டார் தெரியுமா?

Author: Shree
16 August 2023, 6:30 pm

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் ஜெயிலர். இப்படத்திற்கு முன்னர் நெல்சன் கோலமாவு கோகிலா, பீஸ்ட் , டாக்டர் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியிருந்தார். சூப்பர் ஸ்டார் வைத்து படம் எடுப்பதால் எல்லோரது பார்வையும் நெல்சன் மீதே இருந்தது.

இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். பான் இந்தியா படமாக வெளியாகி இப்படம் மாபெரும் வெற்றி பெற்றுவிட்டது.

இதனால் மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளான கலாநிதி மாறன் நெல்சனுக்கு பல கோடி மதிப்புள்ள கார் ஒன்றை பரிசளிக்க திட்டமிட்டு 8 கார்களின் பெயரை சொல்லி இதில் எது வேண்டும் என கேட்டாராம். இதை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்திற்கே சென்ற நெல்சன்…. இருங்க சார் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சொல்றேன் என கூறிவிட்டு அந்த 8 கார்களையும் டெஸ்ட் ட்ரைவ் செய்து வருகிறாராம். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள்… யப்பா யாரு சாமி நீ? பரிசு கூட பார்த்து வாங்குறியேப்பா…! அது சரி சூப்பர் ஸ்டார் கிட்டயே நல்ல காஃபி இருந்தா கொடுங்கன்னு கேட்டவன் தானே நீ? என கூறி கலாய்த்து வருகிறார்கள்.

  • Jyothika controversy in Bollywood web series ஜோதிகா நீங்களே இப்படி பண்ணலாமா…படு கேவலம்…முகம் சுளித்த ரசிகர்கள்.!