ஒவ்வொன்னும் WORTH’அ இருக்கும்… பிக்பாஸ்7 சீசனில் முதல் போட்டியாளர் யார் தெரியுமா?

Author: Shree
16 August 2023, 7:15 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்க உள்ளனர். அதற்கான வேளைகளில் பிக்பாஸ் குழு மும்முரமாக இறங்கியுள்ளது. இந்த முறை யார் யாரெல்லாம் பங்கேற்க உள்ளார்கள் என்பதை கொஞ்சம் பொறுத்திருந்து பார்க்கலாம். கடைசியாக முகமது அசீம் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனும் மற்ற சீசன்களை போலவே சர்ச்சை ஏற்படுத்தும் வகையில் இருக்கவேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்களாம். அதன் படி இந்த சீசனில் கலந்துக்கொள்ளப்போகும் முதல் போட்டியாளர்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.

ஆம், முதலாவது ஆளாக இந்த சீசனில் பாலிமர் நியூஸ் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ” ரஞ்சித் ” தான் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாராம். தோற்றத்தில் ஹீரோ மாதிரியும், பார்ப்பதற்கு அமைதியான நல்ல குணம் உடையவர் போன்றும் இருக்கும் இவர் பிக்பாஸ் மூலம் நிச்சயம் ஒரு நல்ல இடத்திற்கு செல்லலாம் என யூகிக்க முடிகிறது.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…