மாமியார், மருமகள் அடுத்தடுத்து கழுத்தறுத்து கொலை : இரட்டைக் கொலையால் பதற்றத்தில் மதுரை!!

Author: Udayachandran RadhaKrishnan
16 August 2023, 9:52 pm

மாமியார் மருமகள் அடுத்தடுத்து கழுத்தறுத்து கொலை : இரட்டைக் கொலையால் பதற்றத்தில் மதுரை!!

மதுரை மாநகர் எல்லிஸ் நகர் போடி லைன் பகுதியைச் சேர்ந்தவர் கார் ஓட்டுநரான மணிகண்டன். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பாக அழகுப்பிரியா என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மணிகண்டனின் தாயார் மகிழம்மாள் மற்றும் மணிகண்டனின் மனைவி அழகுப்பிரியா ஆகிய இருவரும் இன்று வீட்டில் இருந்த நிலையில் இருவரும் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்துள்ளனர்.

நீண்ட நேரமாக கதவுகள் திறக்கப்படாத நிலையில் அருகில் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தபோது இருவரும் சடலமாக கிடந்ததை பார்த்துள்ளனர்.

இதனை தொடர்ந்து எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருவரின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

இது குறித்து எஸ் எஸ் காலனி காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக மணிகண்டனின் உறவினர்களான குணசீலன் மற்றும் ரிஷி ஆகிய இருவருக்கும் முன் விரோதம் இருந்தாக தகவல் கிடைத்துள்ளதால் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துசென்று விசாரணை நடத்தி வருகின்றனர்

மதுரையி்ல் நடைபெறும் நிகழ்ச்சிக்காக முதலமைச்சர் வருகை தந்த நிலையில் இரு பெண்கள் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியதோடு சட்ட ஒழுங்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!