நடிகை சித்ரா மரண வழக்கில் திருப்பம்.. திடீரென மனுதாக்கல் செய்த அப்பா..!

Author: Vignesh
17 August 2023, 10:40 am

சின்னத்திரை தொலைக்காட்சியில் விஜே சித்ரா தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி சீரியல் நடிகையானவர். முல்லை என்ற கதாபாத்திரத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் நல்லவரவேற்பு பெற்று வந்தார்.

ஹேம்நாத் என்பவரை கடந்த 2020 ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொண்டார். விஜே சித்ரா மர்மமான முறையில் திருமணமாகி ஒருசில மாதங்களில் டிசம்பர் 9 ஆம்தேதி அவர் தங்கிய ஓட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

VJ-Chitra-6-Updatenews360

இதற்கு காரணம் கணவர் ஹேம்நாத் தான் என்று ஒருசிலரும் பின்னணியில் இருக்கிறார்கள் என்று விசாரணையில் தெரியவந்தது.

ஹேம்நாத்திடம் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறையில் சித்ராவின் தந்தை காமராஜ் புகார் அளித்திருந்தார்.

chithra-updatenews360

இது தொடர்பான வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு விசாரணை திருவள்ளூர் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்றும், இந்த விசாரணை விரைவில் விரைந்து முடிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் சித்ராவின் தந்தை மனுதாக்கல் செய்திருக்கின்றார்.

chithra-updatenews360

ஹேம்நாத் இந்த வழக்கை விரைந்து முடிக்க வேண்டாம் என்ற நோக்கத்துடனே மனுக்களை தாக்கல் செய்து விசாரணையை தள்ளி வைத்துள்ளதாகவும், விசாரணை என்பது குற்றச்சாட்டு பதிவு நடைமுறை கட்டத்தில் இருக்கின்றது. மேற்கொண்டு எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், அதில் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

chithra-updatenews360

எனவே, தனது வயது முதுமையை கருத்தில் கொண்டு விசாரணையை திருவள்ளூர் இருந்து சென்னைக்கு மாற்ற வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருக்கிறார். இந்த மனுவானது. ஓரிரு நாட்களில் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது என தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

chithra-updatenews360
  • Vijay Trisha Sangeetha விஜய் வீட்டில் வெடித்த திரிஷா விவகாரம்.. சங்கீதா பாவம் : பரபரப்பை கிளப்பிய பிரபலம்!
  • Views: - 490

    0

    0