ஆரம்பிக்கலாமா? தனி ஒருவன் நினைத்துவிட்டால்…. மீண்டும் இணைந்த ஜெயம் ரவி – மோகன் ராஜா!

Author: Shree
17 August 2023, 11:02 am

தமிழ் சினிமாவில் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் படமெடுத்து மாபெரும் ஹிட் அடித்து எதிர்பார்க்காத வசூலை வாரி குவித்த திரைப்படம் தனி ஒருவன். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த இப்படத்தில் அரவிந்த் ஸ்வாமி செம மாஸான வில்லனாக நடித்து மிரட்டியிருந்தார்.

2015ம் ஆண்டு வெளிவந்த இப்படம் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி வந்தால் 8 ஆண்டுகள் நிறைவடைகிறது. இத்திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார். இயக்குக்குனர் மோகன் ராஜா ரீமேக் படங்களை மட்டுமே இயக்கி வந்ததால் அவரை ரீமேக் ராஜா என ரசிகர்கள் ட்ரோல் செய்து வந்தார்கள். ஆனால் தனி ஒருவன் திரைப்படம் தான் மோகன் ராஜா இயக்கிய முதலாவது நேரடி தமிழ்த் திரைப்படமாகும்.

இப்படம் வெறும் ரூ. 20 கோடி பட்ஜெட்டில் உருவாகி ரூ. 100 கோடி வசூலை ஈட்டி மாபெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கப்போவதாக மோகன் ராஜா , ஜெயம் ரவி இருவரும் வெளியிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது. மேலும் வருகிற 28ம் தேதி இந்த அப்டேட் எதிர்பார்க்கலாம்.

  • my scenes were deleted in goat movie said by black padi சண்ட போட்டு படத்துல நடிச்சேன்; ஒரு பயனும் இல்ல- வேதனையில் GOAT பட நடிகர்… அடப்பாவமே!