திமுகவின் பித்தலாட்டம் வேலைக்கு ஆகாது… ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நீட் இருக்கும் : அடித்து சொல்லும் அண்ணாமலை…!!

Author: Babu Lakshmanan
18 August 2023, 10:35 am

ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தில் நீட் தேர்வை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, வில்லுக்குறி சந்திப்பில் தொண்டர்களிடம் பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:- தமிழ்நாடு கலாச்சாரத்தில் ஆணிவேரே குடும்பம் தான். அந்த குடும்ப ஆட்சியே தற்போது திமுக தான். 1954ல் தமிழகத்திற்காகவும், குமரிக்காகவும் போராடிய போராளிகளின் பெயர்கள் இன்று வரலாற்று புத்தகத்தில் இடம்பெறவில்லை.

இதுவரை ஆறு முறை ஆட்சி செய்த போது 5 மருத்துவ கல்லூரிகளை தான் திமுக ஆட்சி கொடுத்துள்ளது. ஆனால் பிரதமர் மோடி அதிகளவு மருத்துவ கல்லூரிகளை தந்துள்ளார். 30 ஆயிரம் கோடி ஊழல் என குடும்ப ஆட்சிக்கு எதிராக பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜனுக்கு ஏன் டம்மி அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

https://twitter.com/vivinbhaskaran/status/1692204685422383447

தமிழகத்தில் 7 சதவிகிதமாக இருந்த கல்வி அறிவை, 18 ஆயிரம் பள்ளிகளை திறந்து 35 சதவிகிதமாக மாற்றிய கர்ம வீரர் காமராஜருக்கு மரியாதை இல்லை. இதுபோன்று தான் நீட் தேர்வும், தமிழகத்தில் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் நீட் இருக்கும் திமுகவின் பித்தலாட்டத்தால் நீட்டை தடுத்து நிறுத்த முடியாது, எனக் கூறினார்.

  • Director Mysskin controversial speech நீ என்ன அவ்ளோ பெரிய அப்பாடக்கரா?…மிஸ்கினை காரி துப்பிய பிரபல நடிகர்…!